14846 தமிழியல் ஆய்வுச் சோலை: தமிழ் இலக்கியச் சிந்தனை ஆய்வுகள்.

கனகசபாபதி நாகேஸ்வரன். கொழும்பு: தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம், கொழும்புக் கிளை, 1வது பதிப்பு, மே 2006. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). xxvii, 203 பக்கம், புகைப்படம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-98962-3-7. இந்நூலில் இலக்கியமும் திறனாய்வும், சோழப் பெருமன்னர் காலத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி, கவிச்சக்கரவர்த்தி கம்பன் கண்ட இராமனின் பெரெழில், ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி: 1930 முதல் 1950கள் வரை, கதிர்காமப் பிரபந்தங்கள், பெண்கள் ஒடுக்கப்படும் இனமா?, தமிழில் அகப்பாடல்களும் பக்திப் பாடல்களும், அறநெறிப் போதனையில் தமிழிலக்கியங்கள், மலையகக் கூத்துக்களிலே சமயக் கருத்துக்கள், தமிழ்க் காதல், சைவமும் தமிழும், இந்துக் கல்லூரிகளும் தமிழ்க் கல்வி மரபும், சைவத் திருமுறைகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40378).

ஏனைய பதிவுகள்