14847 திருவள்ளுவர் எனும் தெய்வீக முகாமையாளர்.

காரைக்கவி கந்தையா பத்மானந்தன் (தொகுப்பாசிரியர்). காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், Creaze Digital, 14, அத்தபத்து டெரஸ்). xxii, 139 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5ஒ15 சமீ., ISBN: 978-624- 5222-09-4. இந்நூல் நூல்முகம், திருவள்ளுவம் வழங்கும் முகாமைத்துவ வரைவிலக்கணம், திருவள்ளுவத்தில் திட்டமிடல் எண்ணக்கருக்கள், திருவள்ளுவத்தில் ஒழுங்கமைத்தல், திருவள்ளுவத்தில் இயக்குதல், திருவள்ளுவத்தில் மனிதவள முகாமைத்துவம், திருவள்ளுவத்தில் முரண்பாடுகளைக் களைதல், திருவள்ளுவத்தில் தொடர்பாடல், திருவள்ளுவத்தில் கட்டுப்படுத்தல், திருவள்ளுவத்தில் வரவு செலவுத் திட்டமும் நிதி முகாமைத்துவமும், திருவள்ளுவத்தில் சந்தைப்படுத்தல், திருவள்ளுவத்தில் அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல், திருவள்ளுவத்தில் செயல்திட்ட முகாமைத்துவம், திருவள்ளுவத்தில் நேர முகாமைத்துவம், முடிவாக ஆகிய பதினாறு அலகுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. காரைநகரைச் சேர்ந்த க.பத்மானந்தன் கல்வித்துறை ஆளுமையாக மிளிர்பவர். விஞ்ஞானபீட பட்ட தாரியான இவர், தொடர்ந்து உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் தன் முதுநிலைப் பட்டக் கல்வியைப் பெற்றவர். தொழில்வாண்மைப் பட்டங்களையும் மேலதிகமாகப் பெற்ற இவர், கல்வி, விஞ்ஞானம், மொழி, கலை, இலக்கியம், சமயம், திட்ட முகாமைத்துவம் ஆகிய துறைகளில் ஈடுபாடு காட்டி வருபவர். தமிழர் வாழ்வியலில் உள்ள விஞ்ஞானபூர்வமான அறிவியல் இருப்புக்களை வெளிக்கொணரும் வகையில் உண்மைகளைத்தேடி எழுதும் ஆர்வத்தின் வெளிப்பாடாக பல நூல்களை எழுதியுள்ளார்.

ஏனைய பதிவுகள்