14850 நான் பேசும் இலக்கியம்.

கௌசி (இயற்பெயர்: சந்திரகௌரி சிவபாலன்). ஜேர்மனி: வெற்றிமணி வெளியீடு, Brinker Höhe 13, 58507 Lüdenscheid, 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 379, கஸ்தூரியார் வீதி). 128 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955- 7377-92-6. புதிய தலைமுறையினர் தமிழிலக்கியத்தின் சிறப்புகளை, ஆளுமைகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பினை இதிலுள்ள கட்டுரைகள் வழங்குகின்றன. சில கட்டுரைகள் புகலிடத் தமிழரின் பொது வாழ்க்கை வளம்பெற அறிவுரைகளை வழங்குகின்றன. இலக்கியத்தில் வரும் பாடல்களை இன்றைய சமூகத்துடன் பொருத்தி அதனை இலகு தமிழில் புரியவைக்கின்றார். புலமைக்காய்ச்சலும் பாய்ச்சலும், பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல, நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் நான் குடிக்க வைத்துவிட்டான், புலவனுக்கு மதம் எனப்படுவது ஆண்-பெண் காதலே, மட்டக்களப்புப் பகுதியின் நாட்டுப்புறப் பாடல்கள், உதவிக்கு மட்டுமே உறவா?, காலமும் நேரமும் பெரிய மேதாவிகள், நாமும் உங்களில் ஒருவரா?, காலந்தோறும் தமிழ்க் காதல், ஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில், பல முதல்களின் முதல்வன் மு.க.சு.சிவகுமாரன், நெஞ்சம் மகிழவைக்கும் ஒளவையார் என்னும் நாமம்கொண்ட பெண்பாற் புலவர்கள், நெஞ்சம் மட்டும் பேசும் காதல், வாழ்க்கை என்பது வழுக்கையா?, பெண் உளவியலும் வெள்ளி வீதியார் பாடல்களும், சுவாமி விபுலானந்த அடிகளாரின் பன்முகப் புலமையும் வாய்க்கப்பெற்ற சந்தர்ப்பங்களும், கடமையைச் செய்யுங்கள் பலனை எதிர்பார்க்க வேண்டாம், ஹைக்கூ பற்றிய புதிய கண்ணோட்டம், கம்பரும் அவர் வாழ்வியலும், பெண்ணென்னும் ஒரு அதிசயப் பிறவி, சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும், சத்தியம் வெல்லும், விமர்சிப்பவர்களே ஒவ்வொரு நாளும் இந்நிகழ்ச்சியில் மூழ்கிப் போகின்றார்கள், பழமைக்குத் திரும்பும் உலகம், முதுவேனிற்காலச் சிறப்பு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 25 கட்டுரைகளை இத்தொகுப்பு அடக்கியுள்ளது.

ஏனைய பதிவுகள்