14857 வாழ்வியல்: அனுபவ பகிர்வு பாகம் 1.

வீ.என்.சந்திரகாந்தி. திருக்கோணமலை: ஜெயகாந்தி கலை கலாச்சார விளையாட்டு மேம்பாட்டுக் கழகம், 572 A, ஏகாம்பரம் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (திருக்கோணமலை: A.R.Trader, திருஞானசம்பந்தர் வீதி). 152 பக்கம், விலை: ரூபா 250.00, அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-98979-0-3. திருக்கோணமலைப் படைப்பாளி, வீ.என்.சந்திரகாந்தியின் வாழ்வியல் அனுபவங்களின் பதிவாக இந்நூல் வெளிவந்துள்ளது. இரண்டு பாகங்களில் வெளிவந்துள்ள நூலின் முதலாவது பாகம் இதுவாகும். தனது எழுபது வருட வாழ்க்கைப் பயணத்தில் தான் எதிர்கொண்ட சவால்கள், அடைந்த வெற்றிகள், சறுக்குண்ட சம்பவங்கள் தனது ஆழ்மனதில் பதிந்தவை அனைத்தையும் ஒரு நாவலாசிரியனுக்கேயுரிய சுவையுடன் இப்படைப்பாக்கங்களில் சொல்லியிருக்கிறார். திருக்கோணமலையிலிருந்து வெளிவரும் மலைமுரசு, ஒளி அரசி, வீரகேசரி ஆகிய இதழ்களில் காலத்திற்குக் காலம் எழுதப்பட்டவை. நிகழ்காலத்தில் வாழ்தல், அனுசரித்துப் போதலும் முரண்படுதலும், குழுவும் குரோதமும்- கோஷ்டியும் மோதலும், திறமையும் புகழும், சிந்தித்தலும் நிந்தித்தலும், அர்ப்பணிப்பும் அபகரிப்பும், உறவுகளும் பிளவுகளும், நட்பும் எதிர்ப்பாலாரும், கண்ணனை சந்திப்போமா?, வெற்றியும் தோல்வியும்-ஒரு மாற்றுச் சிந்தனை, தலைமைத்துவமும் சமூகமும்-ஒரு மாற்றுச் சிந்தனை, எம்மை நாமே தேற்றுவோமாக, முகநூல் என்கின்ற சமூக வலைத்தளம், அன்பை சம்பாதித்தல், பகையை விலைக்கு வாங்கல், முயற்சி திருவினையாக்கும், சிந்தனை செய் மனமே, பக்கசார்பும் நடுவு நிலைமையும், முதுமையிலும் ஆனந்தமாக வாழலாம், முக நூலின் மறுபக்கங்கள், ஆசியும் சாபமும், கொலையும் தற்கொலையும், அன்னதானமும் சிரமதானமும், மாதரும் மன ஓர்மமும், சமூக நோக்கு, ஜனனம் திட்டமிடப்பட்டதா விபத்தா?, என் வழி தனி வழி, உயர்வும் தாழ்வும், விஞ்ஞானம் எதனைத் தேடுகின்றது?, உல்லாசமும் மகிழ்ச்சியும் ஆகிய தலைப்பகளில் வெளியாகியுள்ள 30 ஆக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

777 Position RTG Review

Blogs Mighty Griffin™ Megaways™ Jackpot Royale™ It on the web position review talks about the new particulars of Irish Wide range Megaways Jackpot Royale, from