சிறப்பு மலர் தயாரிப்புக் குழு. கொழும்பு: இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம், துறைமுகங்கள் அபிவிருத்தி கப்பற்றுறை அமைச்சு, கிழக்கு அபிவிருத்தி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை). (22)+296+ (14) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21.5 சமீ. ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகளைத் தொடர்ந்து இம்மலரில், வள்ளல் நபி கற்றுத்தந்த வழிபாடும் வாழ்வும் (கு.ஜமால் முகம்மது), இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள், பெருவிழாக்கள் (மணவை முஸ்தபா), இஸ்லாமியர்களின் மத நல்லிணக்க மாண்பு (செ. இராசு), இந்து இஸ்லாம் சமய ஒருமைப்பாடு (ம.சா.அறிவுடைநம்பி), யானை பிடித்த பாரம்பரியம் (மு.அப்துஸ் ஸமது), நாடகத் துறையில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு (காவலூர் இராசதுரை), எக்காலத்திற்கும் நிற்கும் ஹிஜ்ரி கணக்கு (மு.கா.தமிழடியான்), இலங்கை முஸ்லிம் புலவர்களின் வாய்மொழிப்பாடல் பாரம்பரியம் ஒரு அறிமுகம் (செ.யோகராசா), இலங்கை வானொலியும் இஸ்லாமிய கீதமும் (என்.எம்.நூர்தீன்), சூபித்துவத் தமிழிலக்கியங்கள் (பீ.மு.அஜ்மல்கான்), தமிழக முஸ்லிம் கல்விக்கூடங்களும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணியும் (N.A. அமீர் அலி), இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள் (நசீமா பானு), தஸவ்ஃப் ஒரு விளக்கம் (ஏ.வி.எம்.நஸீமுத்தீன்), திப்பு இன்றைய ஆட்சியாளர்கள் பின்பற்றத் தக்க முன்மாதிரி (வீ. ஜீவானந்தம்), இலக்கியத்திற்குத் தமிழக முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு (ஓ. நசீமா அகமது), இஸ்லாமும் இலக்கியமும் (வி.எஸ்.முகம்மது அமீன்), முஸ்லிம்கள் ஆடிய மகிடிக் கூத்து (காரை.செ.சுந்தரம்பிள்ளை), ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழ் முஸ்லிம் அமைப்பு (முதுவை ஹிதாயத்), மரபுவழிக் கவிதையில் இலங்கை முஸ்லிம்கள் (முருகையன்), தினகரனும் முஸ்லிம் படைப்பாளிகளும் (ராஜ ஸ்ரீகாந்தன்), உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் ஒரு பார்வை (ஜே.எம்.சாலி), இலங்கை சட்டவாக்க மன்றங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் (எம்.எம்.ராஸிக்), சீறாப் புராண விளக்கம் நபி வளர்ந்தனரே (அல்ஹாஜ் ஆ.மு.ஷரிபுத்தீன்), சின்னாலிம் அப்பா (எஸ்.ஏ.ஆர். செய்யது ஹஸன் மௌலானா), கசாவத்தை ஆலிம் புலவர் (ஏ.எம்.நஜிமுதீன்), இறைவாக்குப் பெற்ற அருள்வாக்கி (சாந்தி முஹியித்தின்), அட்ட நாக பந்தமும் சுல்தால் மரைக்கார் புலவரும், வரகவி செய்கு அலாவுத்தீன் (எம்.எஸ்.எம்.அனஸ்), மீரா முகைதீன் ஆலிம் புலவர் (அஷ்ரப் சிஹாப்தீன்), நாவலர் ஈழமேகம் பக்கீர்த் தம்பி அவர்களின் வாழ்க்கை வரலாறு (யூ.எல்.அலியார்), மன்னாரில் மின்னிய முத்து – தமிழ் முழக்கம் புலவர் எம். பீ. எம். முஹம்மது காஸீம் ஆலிம் (பாத்திமா றம்ஸானி), அப்துஸ் ஸமது ஆலிம் புலவர் (வாழைச்சேனை அமர்), அ.மு.அசனா லெப்பைப் புலவர் (எஸ்.எம்.ஏ. ஹஸன்), யாழ்ப்பாணம் பத்றூதீன் புலவர் (கே.எம்.எம்.இக்பால்), கலையரசு மர்{ஹம் எம்.ஏ.முஹம்மத் (திக்குவல்லை ஸப்வான்), புலவர்மணி அல்ஹாஜ் ஆ.மு.ஷரிபூத்தீன் (எம்.வை.எம்.முஸ்லிம்), இலக்கிய ஆய்வறிவாளர் ஜே.எம்.எம்.அப்துல் காதிர் (வி.எம். இஸ்மாயில்), கவிமணி எம்.சி.எம்.ஸ{பைர் (ஏ.எம்.எம்.புவாஜி), புதுமைப் போக்கும் புரட்சி நோக்குங் கொண்ட பெருங் கவிஞர் புரட்சிக் கமால் (கபூர் பின் ஷா), அண்ணல் கவிதைகள் ஒரு பார்வை (அன்பு முகையதீன்), மறைந்த கவிஞர் யுவன் (கபூரும்) பொத்துவில் கவிஞர்களும் (அன்புடீன்), முதல் தமிழ்த் தினசரி “தினத்தபால்” தந்த மர்ஹும் கே.ஏ.மீரான் முஹிதீன் (எஸ்.ஐ. நாகூர் கனி), எச்.எம்.பி.முஹைதீன் (திக்குவல்லை கமால்), கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் (எஸ்.எம்.கமால்தீன்), “இன்ஸான்” அபூதாலிப் அப்துல் லத்தீஃப் (பண்ணாமத்துக் கவிராயர்), பிறையன்பன் பேராசிரியர் சு. வித்தியானந்தன் (எஸ்.எம்.எம்.ஜெமீல்), முதல் முஸ்லிம் சிறுகதையாளர், “பித்தன்” கே.எம்.முஹம்மது மீரா ஷா (ஏ.எம்.ஏ. அப்துல் ரஹ்மான்), ஈழத்து இலக்கியத்தின் உந்து விசை சுபைர் இளங்கீரன் (ப.ஆப்டீன்), அ.ஸ.வின் எழுத்துக்கள் ஒரு சமூகப் பதிவு (றமீஸ் அப்துல்லாஹ்), எழுத்துக்கு இலக்கணமாக வாழ்ந்த வை.அஹ்மத் (ஏ.ஜி.எம்.ஸதக்கா), காலக் கல்வெட்டில் எழுத்தாளர் – சித்தி ஜுனைதா (கே.ஜெய்புன்னிஸா), எம்.எச்.எம். ஷம்ஸ் பன்முகத் திறமை கொண்ட ஓர் ஆளுமை (திக்குவல்லை கமால்), எஸ்.டி.எஸ். என்னும் ஆலவிருட்சம் (ஜின்னாஹ்), மறைந்தும் மறையாத எம். எச். எம். அஷ்ரஃப் (மருதூர் ஏ.மஜீத்), சித்தி ஜுனைதா பேகமும் முதுசொல் இலக்கியக் கூடமும் (நா.கண்ணன்), முஸ்லிம் இலக்கியவாதிகள் பற்றிப் படர, கொழுகொம்பாகவிருந்த இனிய சிவா-ஆர்.சிவகுருநாதன் (எஸ். முத்துமீரான்), இலக்கியத் தகவல்களைத் தந்துதவும் ஒரு தகவல் நிலையம் மர்{ஹம் அல்லாப்பிச்சை (அபூரவ்ஷன்), மலையக இலக்கியமும் முஸ்லிம்களும் (தெளிவத்தை ஜோசப்), தமிழும் இஸ்லாமும் சில சிந்தனைகள் (சி.மௌனகுரு), ஆசாரக்கோவை என்ற அற்புத ஒழுக்க நூல் (நயீமா சித்தீக்), ம.மு. உவைஸ் இஸ்லாமிய தமிழ் இலக்கியத் துறையில் பாரிய சாதனை (எஸ்.எம். ஹனிபா) ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து “கவிப்பூக்கள்” என்ற பிரிவில் கவிக்கோ அப்துல் ரகுமான், ஜின்னாஹ், உள்ளிட்ட தமிழறிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. சிறப்பு மலர்க் குழுவில் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஏ.ஜீ.எம்.சதக்கா, வாழைச்சேனை அமர், அல் அஸ{மத், நியாஸ் ஏ.ஸமத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27443).
Casinos on fruit stack deluxe casino uk the internet inside South Africa Trusted SA Casino Sites Sep 2024
To get more advice about the newest 10Cric casino sense, realize our academic comment. At the same time there is also bingo, scratchcards and you