14863 அனைத்தும்: படைப்பிலக்கியம் பற்றிய பார்வை.

முருகேசு ரவீந்திரன். யாழ்ப்பாணம்: அருணோதயம் வெளியீடு, 22/10, கச்சேரி நல்லூர் வீதி, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). xvii, 138 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54221- 2-3. இலங்கை வானொலி அறிவிப்பாளரும், சிறுகதை எழுத்தாளருமாகிய முருகேசு ரவீந்திரன் 2009 முதல் 2011 வரை தினகரன் வார மஞ்சரியில் கூராயுதம் என்ற பகுதியில் தொடர்ச்சியாக எழுதி வந்த கட்டுரைகள் இத்தொகுப்பின்வழி நூ லுருவாகியுள்ளன. தனது வாசனைப் பரப்பில் தன்னைக் கவர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் பற்றிய கருத்துக்களின் தொகுப்பாக அமைந்த இக்கட்டுரைகளை, அக்கால இலக்கியப் போக்குகள், பண்பாட்டு நிலைமை என்பவற்றைப் பற்றிய தகவல் தேட்டமாகக் காணமுடிகின்றது. கவிதை இலக்கியம், சிறுகதைகள், நாவல்கள், படைப்புக்களும் படைப்பாளிகளும், நாடக இலக்கியம், இலக்கியமும் பண்பாடும் எனப் பல்வேறு பிரிவுகளுள் இதிலுள்ள 25 கட்டுரைகளும் அடக்கப் பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63633).

ஏனைய பதிவுகள்