த.கலாமதி. யாழ்ப்பாணம்: ஜீவநதி, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 94 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-0958-07-8. இலக்கியத் திறனாய்வும் உளவியல்சார் அணுகுமுறையும், உளம் வரைந்த ஓவியம்: கபிலரின் குறிஞ்சிப்பாட்டு, தீரன் ஆர்.எம்.நௌஷாத் எழுதிய “ஒய்த்தா மாமா” சிறுகதை பற்றிய ஓர் உளவியற் பார்வை, தேவமுகுந்தனின் “நாங்கள்” ஆசிரியம்சார் உளவியலை வலியுறுத்தும் படைப்பு, கே.டானியலின் “கானல்” ஓர் உளவியல் மீள்பார்வை, உளவியல் நோக்கில் தெணியானின் “காத்திருப்பு”, தெணியானின் “கானலில் மான்” ஆளுமை உளவியல் வழியே ஒரு மீள்பார்வை, இரா.நடராசனின் நாவலான “ரோஸ்” பற்றிய ஒரு மதிப்பீட்டு ஆய்வு: ஓர் உளவியல் அணுகுமுறை ஆகிய கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. ஜீவநதி வெளியீட்டகத்தின் 101ஆவது பிரசுரமாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65193).