14865 கனடாவில் கதைத்தது.

எஸ்.பொன்னுத்துரை. கனடா: தமிழ் இலக்கியத் தோட்டம், ரொரன்ரோ, 1வது பதிப்பு, ஜுன் 2011 (அச்சக விபரம் தரப்படவில்லை). 18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ. கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் ஓர் அறக் கட்டளையாக 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது ஆகியவை இதனுள் அடங்கும். 2010ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முன்னோடியான எஸ்.பொன்னுத்துரை ஆகிய எஸ்.பொவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. இவ்விருதினைப் பெற்றபின்னர் எஸ் பொ. அவர்கள் ஆற்றிய ஏற்புரை நூல்வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Spielbank Bonus exklusive Einzahlung

Content Erreichbar Casino Freispiele ohne Einzahlung im Jahr 2021 Freispiele Bestimmung ringsherum um Angeschlossen Spielsaal Bonus exklusive Einzahlung Wie gleichfalls findet man angewandten Erreichbar Kasino