லறீனா அப்துல் ஹக். சென்னை 600005: மணற்கேணி பதிப்பகம், முதல் தளம், புதிய எண் 10, பழைய எண் 288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2015. (தஞ்சாவூர்: அகரம் அச்சகம்). 110 பக்கம், விலை: இந்திய ரூபா 80.00, அளவு: 21×14 சமீ. இந்நூலில் குமாரி ஜயவர்தனவின் ஆய்வுலகம்: சில அறிமுகக் குறிப்புகள், அழகுத் தமிழில் அரபுக் கதைகள், ஊடறு.கொம்: விழுமிய வாழ்தலை நோக்கி, மொழியின் விடியலை முழங்கும் குரல்கள், ஊருக்கு நாலு ஆளுமைப் பெண்கள், மழைமரத் தவத்தில் திளைத்தபடி, ஈழத்துக் கவிதை இதழ்கள் வரிசையில் “கவிஞன்” இதழ்: சில குறிப்புகள், யாதுமாகி நிற்கும் ஓர் இளைய பாரதி, இலங்கையின் இக்பால், புலவர் அப்துல் காதர் லெப்பை (1913-1984), நீட்சி பெறும் சொற்கள் ஆகிய பத்து இலக்கியக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65145).