14868 பதிவுகளின் சங்கமம்.

எஸ்.எல்.மன்சூர். அட்டாளைச்சேனை-01: எஸ்.எல்.மன்சூர், அனாசமி பதிப்பகம், டீன்ஸ் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2014. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட் பிரின்டர்ஸ்). 132 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-4975-01-9. அட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூரினால் திறனாய்வு செய்யப்பட்ட நூல்கள், சஞ்சிகைகளின் விமர்சனத் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. சமயம், அரசியல், கல்வியியல், இலக்கியம்-வரலாறு, சிறுகதைகள், காவியம்-குறும்பா-கவிதைகள் ஆகிய துறைகளில் எழுதப்பட்ட நூல்கள் இவரது திறனாய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. இதில் 30 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றும் நூலாசிரியர் எஸ்.எல்.மன்சூர் சிறந்த விமர்சகராகவும், எழுத்தாளராகவும் அறியப்பட்டவர். மொழியின் செழுமை என்ற தன் முதலாவது நூலை முன்னதாக வெளியிட்டவர். இது இவரது இரண்டாவது நூல். இந்நூல் பற்றிய தனது உரையில், நூல்களில் சரி-பிழை காண்பது தனது நோக்கமல்ல என்றும், இலக்கிய வடிவத்தினுள் கொண்டுவரப்பட்ட நூல்களின் எண்ணக்கருவைத் தான் அறிந்து, தனது தேடல்களினூடாக நூலுக்கு வழங்குகின்ற அறிமுகக் குறிப்புகள் எழுத்தாளர்களை ஊக்கவிக்கவேண்டும் என்பதே தனது குறிக்கோளாகும் என்று குறிப்பிட்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 65124).

ஏனைய பதிவுகள்

Maximize your Victories

Posts Online bingo for real money no minimum deposit | Exactly why are Bonuses Constantly Geared toward Slot Players? Deposit It’s for example attractive to