14872 வ.அ.இராசரத்தினத்தின் ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கிறது: நாவலும் கருத்துக்களும்.

த.அஜந்தகுமார். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, வைகாசி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). x, 122 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-76-3. க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களின் பயன்பாட்டுக்கென இந்நூலை யாழ்/ ஆழியவளை சி.சி.த.க.வித்தியாலய ஆசிரியர் த.அஜந்தகுமார் தொகுத்து வழங்கியுள்ளார். 1992இல் வெளியான ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது என்ற வ.அ.இ. அவர்களின் நாவல் 1960 காலகட்டத்தைப் பிரதிபலிக்கின்றது. தமிழ்ப் பாரம்பரியத்தை மிக இறுக்கமாக வைத்திருந்த ஆலங்கேணிக் கிராமத்தையும் அக்கிராமத்து மக்களின் வாழ்வியலையும் இந்நாவல் பதிவுசெய்திருந்தது. திருக்கோணமலைப் பிரதேச நாவல் வளர்ச்சியிலும், கிழக்கிலங்கை நாவல் வளர்ச்சியிலும், ஒட்டுமொத்தமாக ஈழத்து நாவல் வளர்ச்சியிலும் இந்நாவல் சில தடங்களைப் பதித்துள்ளது. இந்நாவல் பற்றிய பேராசிரியர் ம.இரகுநாதன், பேராசிரியர் செ.யோகராசா ஆகியோரின் கருத்துரைகளும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூல் ஜீவநதி வெளி யீட்டகத்தின் 93ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

12118 – அகண்டாகார அருணாசல அருவி: நல்லைக்குகன் அழகு மதுரம்.

ஸ்ரீமத் அருணாசலம் சுவாமிகள். கொழும்பு 6: டாக்டர் கே.கிருஷ்ணானந்தசிவம், ஸ்ரீ சிவகுருநாத பீட அறக்கட்டளை, 501, லாண்ட்மார்க் கோர்ட், 33, ருத்திரா மாவத்தை, வெள்ளவத்தை, 3வது பதிப்பு, ஜனவரி 2017, 1வது பதிப்பு விபரம்

14101 இந்து தருமம் 1962-63.

வ.கணபதிப்பிள்ளை, கு.கல்வளை சேயோன் (இதழாசிரியர்கள்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1962. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194யு, பண்டாரநாயக்க மாவத்தை). (12), 1-84+1-40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,