கருணாகரன், ப.தயாளன், சித்தாந்தன். சென்னை 600005: வடலி வெளியீடு, பி-55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 272 பக்கம், விலை: இந்திய ரூபா 220., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-0-9919 755-8-7. முன்னாள் போராளியும், கவிஞரும், ஈழநாதம் வன்னிப் பதிப்பின் ஆசிரியர் குழுவின் ஊடகவியலாளருமான சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) 2007ஆம் ஆண்டு வவுனியாவில உள்ள அவரது வீட்டில் வைத்து, தனது 7 வயதுப் பிள்ளை உள்ளிட்ட குடும்பத்தினரின் முன்னிலையில் போராளிக் குழுவொன்றினால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1994இல் எழுதத் தொடங்கிய இவர் தான் படுகொலை செய்யப்படும் 2007வரை தொடர்ந்தும் ஊடகங்களில் எழுதிவந்தவர். அவர் வாழும் காலத்தில் எழுதிய முக்கிய ஆக்கங்களின் தொகுப்பாக இந்நூலை அவரது நண்பர்கள் வெளியிட்டுள்ளனர். ஐந்து பகுதிகளைக் கொண்ட இத்தொகுப்பின் 1வது பகுதி அவரது கவிதைகளைக் கொண்டதாகவும், 2வது பகுதி அவர் எழுதிய மீட்சியற்ற நகரத்தில் செண்பகம் துப்பிய எச்சம், பாலம், நெருப்புக் காலத்தில் ஒரு துளிர், ஒரு இரவும் ஒரு காலமும், குகை ஆகிய சிறுகதைகளைக் கொண்ட தாகவும், 3வது பகுதி அவர் எழுதிய விமர்சனங்களின் பதிவாகவும், 4வது பகுதி கா.சிவத்தம்பி, சோ.பத்மநாதன், எஸ்.உமா ஜிப்ரான், கிளிநொச்சி மத்திய கல்லூ ரி ஆகியோருடனான நேர்காணல்களாகவும், 5வது பகுதி எஸ்போஸ் பற்றிய பிற படைப்பாளிகளின் குறிப்புகள், கட்டுரைகள் மற்றும் பதிவுகளாகவும் அமைந்துள்ளன.