செல்லத்துரை கலாவாணி. யாழ்ப்பாணம்: செ. கலாவாணி, வாணி அகம், சிறுப்பிட்டி வடக்கு, 1வது பதிப்பு, ஆடி 2012. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). 64 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 14×10 சமீ. கலாவாணியின் கட்டுரைகளும் கவிதைகளும் கொண்ட தொகுப்பு நூல். கட்டுரைப் பிரிவில் விடுகதை, பழமொழி, திருக்குறளும் அதன் சிறப்பும், விளையாட்டு, நட்பு, உழுதுண்டு வாழாவாரே வாழ்வார், தற்கால இலக்கியங்களும் அதன் பரவலும், நவீன தொடர்பாடல், தொல்காப்பிய நூல் காட்டும் தமிழர் வாழ்வு, நாடகம், மொழி என்பதும் அதன் பயன்பாடும், உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கவிதைப் பிரிவில் கல்வி, இராமாயணத்திலோர் காட்சி, சங்கப் பாடல் தரும் விருந்துணவு, சகுந்தலை, கவிஞன், நல் ஆசிரியர், திருமணம், தியாகம், மழலை, மலர், தேன், வரதட்சணை, கனவு, முதிர்வு, குழந்தை தாலாட்டு, நிலா, மயில் நடனம், தாலி, வீரம், கண்கள், பேனா, கிராமியப் பாடல், பெண், மணப்பெண், விதி, மரணம், மன்னர் உலா, அழகு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் என்பன இடம்பெற்றுள்ளன.
14373 சங்கநாதம் 1976-1977.
சி.சிவானந்தராஜா (இதழாசிரியர்). கொழும்பு 6: வணிக கலை மன்றம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, மார்ச் 1977. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி). (4), 62 பக்கம்,