14879 விகடனின் விளங்கா விளக்கங்கள்.

சி.க.அமிர்தஞானம், இரா.மகேந்திரன். திருக்கோணமலை: இரா.மகேந்திரராஜா, பிருந்தாவனம், 106, பிரதான வீதி, 1வது பதிப்பு, 2010. (திருக்கோணமலை: சி.சிவபாலன், அஸ்ரா பிரின்டர்ஸ்). viii, 104 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 20.5×15 சமீ. நகைச்சுவைக்கும் சிந்தனைக்கும் விருந்தாக அமையக்கூடிய சின்னஞ்சிறு விடயங்களை இந்நூல் வழங்குகின்றது. கடவுள், கொஞ்சம் என்பதின் பொருள், ஆசாரம், மறுபிறப்பு, இனப்பற்று, தேடுகிறோம், சோளம்பொரி, பாலியல் பலாத்காரம், அவரவர் பார்வை, அளவோடு இருந்தால் போதும், சான்ட் பேப்பர், பிஞ்சிலே பழுத்தது, சும்மா, தொழில்நுட்பம், அட்டகாசம், காதல், நடிப்பு, வேண்டாம் மரணபயம், வைத்தியம், வாய்மைக்கரசன் அரிச்சந்திரனா?, மதப்பற்று, வறுமையில் செம்மை, பயணம், இறந்தநாள், அவர்தான் இவர், கெஞ்சினால் மிஞ்சினால், ஊமையா என் பிள்ளை, மொழிப்பற்று, நம்பிக்கை, தானாக விழும், கேட்ட கேள்வி பிழை, கடவுளின் பங்கு, முந்துவது யார்?, தமிழ், பழமொழிகள், ஆசிரியர், நம் மதங்கள், தோற்றங்கள், படைப்புக்கள் பலவிதம், பிறந்தநாள், சந்தேகம், தொலைக்காட்சி, ஐயோ இனி போவது எங்கே?, மண்ணுரிமை, பெற்றபிள்ளையும் வளர்த்த மரமும், கொடுக்கல் வாங்கல், பொறாமை, ஓய்வூதியம், பற்றுக்கள் ஆசைகள், கிரிக்கெற் ஆகிய 50 விடயங்களைப் பற்றிப் பேசும் இந் நூலில் இடையிடையே தத்துவக் கருத்துக்களும், ஆன்றோர் பொன்மொழிகளும், குட்டிக்கதைகளும் செருகப்பட்டுள்ளன. சமூக, சமய விழுமியங்களையும், கலாச்சாரப் பண்புகளையும் போதிப்பதாக இவை அமைகின்றன. நூலாசிரியர் அமிர்தஞானம், தினக்குரல் பத்திரிகையின் பென்சனியர் பேரம்பலம் என்ற நகைச்சுவை கேலிச்சித்திரத்தின் வாயிலாகவும், பாப்பாக்களுக்குப் பலகாரம், பாட்டும் பதமும் போன்ற தொடர்களின் மூலமாகவும் நன்கு அறியப்பட்டவர்.

ஏனைய பதிவுகள்

12757 – கவின் தமிழ்2001: வடக்கு கிழக்கு மாகாண தமிழ்மொழித்தின விழா மலர்.

ந.அனந்தராஜ் (இதழாசிரியர்). திருக்கோணமலை: வடக்கு-கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, ஜுலை 2001. (திருக்கோணமலை: உதயன் பதிப்பகம்). xix, 120 பக்கம், சித்திரங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5 x18.5 சமீ.