சீ. டரில் போட் (ஆங்கில மூலம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், “சிறிமதி பாயா”, 58, சேர் ஏர்னெஸ்ட் த சில்வா வீதி, 1வது பதிப்பு, 1967. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). xviii, 576 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. மக்கட் பரம்பியலுக்கான ஓர் புவியியல் முறை அறிமுகமாக, பிரித்தானிய பல்கலைக்கழக அறிஞர் C.Daryll Forde அவர்கள் எழுதி லண்டன் Methuen and Co. வெளியிட்ட Habitat, Economy and Society என்ற நூலின் தமிழாக்கம் இதுவாகும். இதனுள் ஐரோப்பியப் பழங்குடிமக்களின் ஆதிவாழ்க்கை விளக்கம் உண்டு. இந்நூல் நான்கு பிரதான பிரிவுகளைக் கொண்டது. முதற் பிரிவில் பற்றை மனிதனும் எஸ்கிமோவும், வேட்டையாடியும் மீன் பிடித்தும் வாழ்ந்த விதம் கூறப்படுகின்றது. போறோ, யோருபா ஆதிய பழங்குடியினர் வேளாண்மை வாழ்க்கை நடாத்திய முறைமை இரண்டாம் பிரிவில் கூறப்படுகின்றது. மாசை, கசாக்கர் ஆதியோர் மந்தை மேய்த்து வாழ்ந்த முறைமை மூன்றாம் பிரிவிற் கூறப்படுகின்றது. நான்காம் பிரிவில் இம்மூன்று பிரிவினரதும் உணவு பேணல், சிக்கன வாழ்க்கை முறைமை என்பன பற்றிய பொதுவான விளக்கங்கள் கூறப்படுகின்றன. இவ்வாங்கில மூலநூல், 1934இல் வெளிவந்தது. அதன்பின் 13 முறை மீள்பதிப்பிற்குள்ளாகியிருந்தது. இந்நூல் 13ஆவது பதிப்பின் தமிழாக்கமாகும். பல்கலைக்கழகங்களின் புவியியல்துறை மாணவர்களுக்கும் மானிடவியல்துறை மாணவர்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23640).
Finest Mobile Video game
Content Casino Commodore casino instant play – Cellular Online casino games The best casino games to have mobile People you will today put fund for