செல்வத்துரை குருபாதம். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202, 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xviii, (10), 162 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-955-3491-00-8. மாயன்கள்-நாகர்களைப் பற்றிய ஓர் அறிமுகம், மாயன் இன அடையாளங்களும் குடும்ப அமைப்பும், வனாந்தரங்கள் வெளிப்படுத்திய மாயன் அறிவியல், அமெரிக்காவில் இந்திய விவசாயிகள் என அழைக்கப்பட்டவர்கள் நாகர்களா?, வரலாறு கூறும் மாயன் வரலாறு, மாயன்கள் நாகர்களதும் இலங்கை-இந்தியத் தொடர்பு, ஆச்சரியமான தகவல்கள், மாயன்களின் ஆக்கத்திறன் கலாச்சாரம், மிகப் புராதன காலத்தில் ஆடையணிந்த மாயன்கள், கை சைகைகளின் பாவனைக் காலத்தில் மொழி மூலம் தொடர்பு கொண்ட மாயன்கள், கணிதத்தின் முன்னோடிகள் பூச்சியம், தசம தானத்தின் அறிமுகம், வானில் ஆய்வு மையம், நிகழ்வுகளின் கால ஒழுங்கும் கலண்டர் முறையும், கட்டிடக் கலையும் கல்விக் கூடங்களும், தென் அமெரிக்காவில் புராதன இந்து ஆலயங்கள், உலகப் புகழ் பிரமிட், செறமிக்ஸ்சும் தொல்லியல் சின்னங்களும், பந்து கண்டுபிடிப்பும் பந்து விளையாட்டும், கண்டுபிடிப்பகள், போக்குவரத்துத் தொழில்நுட்பம், மதம், ஆட்சிமுறையும் அதிகாரமும், உள்நாட்டு யுத்தம், மாயப்பன் ஒன்றியம், இந்தியர்களது நாகரிகத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்ட கொலம்பஸ், இந்தியர்களது பிரதேசத்தை கைப்பற்றத் தீர்மானம், தென் அமெரிக்காவிற்கு நாகரிகத்தை அறிமுகப்படுத்தியவர்கள் இந்தியரே, கற்கள் கூறும் இரகசியங்கள், முடிவுரை ஆகிய 28 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பன்முகப் புலமை கொண்ட ஆய்வாளர் எஸ்.குருபாதம் இலங்கையில் யாழ்ப்பாணத்துக் கல்வியாளர்கள் மத்தியில் பத்திரிகை ஆசிரியராக, அரசியல் ஆய்வாளராகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர். பின்னாளில் புலம்பெயர்ந்து கனடாவில் ஒன்டாரியோ மாநிலத்தில் வாழ்ந்த வேளையில் ஆன்மீகம், வரலாறு, ஆசியப் பண்பாடு, நாகரீகம் தொடர்பில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராகத் தனது புலமைத்துவத்தை விரிவாக்கி இருப்பவர்.
Majestic Chiffre Majestic Slots Slots Salle de jeu
Aisé Aloha cluster pays slotmachine | Un effet Investisseurs Aval D’une Bout Protéger Sur Une telle Pièce Pour Plaisir Un tantinet Free Spins And No