14882 கலைச்சொற்கள்: நான்காம் பகுதி: புவியியற் சொற்றொகுதி.

சொல்லாய்ந்த குழுவினர். கொழும்பு 7: அரசகரும மொழி அலுவல் பகுதி, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 421, புல்லர்ஸ் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1956. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). (4), 120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×15.5 சமீ. அரசகரும மொழி அலுவல் பகுதியினரின் கல்விப் பிரிவினரால் வெளியிடப்பெற்றுள்ள இக்கலைச்சொற்றொகுதியின் தயாரிப்பில் ஈடுபட்ட சொல்லாய்ந்த குழுவில் கலாநிதி கா.குலரத்தினம், திரு. ஆ.பொ.கந்தசாமி, திரு. சி.நடராசர், பண்டிதர் கா.பொ.இரத்தினம், கலாநிதி வ.பொன்னையா, திரு. அ.வி. மயில்வாகனன் ஆகியோர் பணியாற்றியிருந்தனர். பொதுத் தகுதிப் பத்திரத் தேர்வின் புவியியல் பாடத் தேவைக்கு வேண்டிய கலைச்சொற்கள் யாவும் இங்கு இடம்பெற்றுள்ளன. தேவைப்படுமிடத்து பிறமொழிச் சொற்களுக்கு தமிழுருவம் கொடுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18215).

ஏனைய பதிவுகள்

15484 இவன்-ஒரு சாமான்யனின் சரிதம்.

கோவுஸ்ஸ கே.ராம்ஜி உலகநாதன். எல்ல: கோவுஸ்ஸ கே.ராம்ஜி உலகநாதன், வெற்றிலைக்கொடி தோட்ட இல்லம், கோவுஸ்ஸ, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (பண்டாரவளை: W.A.S., No. 44,45, I.S. Complex  தர்மவிஜய மாவத்தை). 90 பக்கம்,