14884 இலங்கையில் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் மாற்றுச் சக்தி வளங்கள்: ஒரு புவியியல் நோக்கு.

இரா.சிவச்சந்திரன். யாழ்ப்பாணம்: அகிலம் வெளியீடு, இல. 7. ரட்ணம் ஒழுங்கை, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (யாழ்ப்பாணம்: கங்கை பிரின்டர்ஸ்). 30 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 50.00, அளவு: 20×14.5 சமீ. தமிழர் இலங்கையில் ஒரு தனித் தேசிய இனம். அவ்வினத்துக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. அவர்களுக்கொரு பாரம்பரியத் தாயகம் உண்டு எனவே எமது பிரதேசத்தை நாமே அபிவிருத்தி செய்யவேண்டிய பொறுப்பும் கடமைப்பாடும் நம்மவர்களுக்கு-குறிப்பாக- அறிவுப் புலத்தில் உள்ளோர்க்கு உண்டு. 18,323 சதுர கிலோமீற்றர் (7157 சதுர மைல்) பரப்பளவு கொண்ட வடகீழ் மாகாணத்தை தன்நிறைவானதும் நிலைத்து நிற்கத்தக்கதுமான அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் பல்வேறு கூறுகளில் மாற்றுச் சக்தி வளம் பற்றி இவ்வாய்வு பேசுகின்றது. இவ்வாய்வின் நோக்கம் நிறைவான மாற்றுச் சக்தி வளம் (பசுமைச் சக்தி வளம்) எமது பிரதேசத்தில் உண்டு என்பதை நிரூபிப்பதும் அது பற்றிய சிந்தனையை பல்வேறு துறைசார் புலமையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் ஏற்படுத்துவதுமாகும்.

ஏனைய பதிவுகள்