இலங்கை நில அளவைத் திணைக்களம். கொழும்பு 5: இலங்கை நில அளவைத் திணைக்களம், இல. 150, கிருல்ல வீதி, நாரஹேன்பிட்டிய, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). xii, 172 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 43×31.5 சமீ., ISBN: 978-955-9059-07-3. 1988இல் இத்தேசப்படத் தொகுதியின் ஆங்கிலப் பதிப்பு முதலில் வெளியாயிற்று. ஓகஸ்ட் 2008இல் இரண்டாம் பதிப்பு ஆங்கிலத்தில் வெளியானது. பின்னர் 2013இல் 2ஆவது ஆங்கிலப் பதிப்பின் தமிழாக்கம் முதலாவது பதிப்பாக இரண்டு பாகங்களில் வெளியிடப்பட்டது. அப்பதிப்பின் முதலாவது பாகமே இந்நூலாகும். நூலில் இரண்டாம் பதிப்பு தமிழாக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண தேசப்படத் தொகுதியாகவில்லாமல் இது, தேசத்தின் பல்வகைமை சார்ந்த தகவல்களை தகுந்த கோணங்களில் வழங்க முயன்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65512).