14891 இலங்கை தேசப்படத் தொகுதி: பாடசாலை வெளியீடு.

ஆர்.பீ. பீரிஸ் (பிரதான தொகுப்பாசிரியர்). கொழும்பு 5: இலங்கை நில அளவைத் திணைக்களம், இல. 150, கிருல்ல வீதி, நாரஹேன்பிட்டிய, 2வது பதிப்பு, 2016, 1வது பதிப்பு, நவம்பர் 2013. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). viii, 209 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ., ISBN: 978-955-9059-12-7. இலங்கை நில அளவைத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இலங்கைத் தேசப்படத் தொகுதியின் பாடசாலைப் பதிப்பு இது. இரு முக்கிய நோக்கங்களுக்கு இத்தொகுதி முன்னுரிமை வழங்குகின்றது. தற்போது பாடசாலைகளில் போதிக்கப்பட்டுவரும் 6 முதல் 13 வரையிலான தரங்களுக்குரிய பாட விதானங்களிலுள்ள பல்வேறு விடயப் பகுதிகளுக்கும் பொருத்தமான தகவல்கள், வரைபடங்கள், அட்டவணைகள், பட உருக்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பது முதலாவதாகும். முக்கியமாக புவியியல் பாடத்திற்கு மேலதிகமாக வரலாறு, பிரஜைகள் கல்வி, விஞ்ஞானம், விவசாயம், சித்திரம், அரசியல், கலை மற்றும் பொருளியல் போன்ற பாடங்களும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. இந்த நோக்கத்தினை ஈடுசெய்யும் வகையில் இந்நூலில் அமைவிட வரைபடங்கள், இலங்கையின் வரைபடங்கள், பௌதிக சூழலும் உயிரியற் சூழலும், தொல்பொருளியலும் கலைகளும், குடித்தொகை, விவசாயம், போக்குவரத்து சக்தி மற்றும் கைத்தொழில், வர்த்தகம், பொருளாதாரம், அரசாங்கம்-நிர்வாகம் மற்றும் நிதி, சமூக நிலைமைகள், கல்வியும் பயிற்சியும் ஆகிய 12 பிரிவுகளின் கீழ் தேசப்பட விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்