14892 இந்துச் சுடர்கள். வியாச கல்யாணசுந்தரம் (பதிப்பாசிரியர்).

கொழும்பு 4: சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சிக் கழகம், Youth League for Santhana Dharmic Perception, 3, Ridgeway Place, 1வது பதிப்பு, மே 2003. (கொழும்பு 13: Sharp Graphics Pvt. Ltd.). 192 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×12 சமீ. இது, இந்து சமய விவகார அமைச்சினால் 2003இல் வெகு சிறப்பாக ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இரண்டாவது உலக இந்து மகாநாட்டை கௌரவிக்கும் முகமாக சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சிக் கழகம், சங்கநாதம் சஞ்சிகை, ஆரியபட்டர் பாலமந்திர் ஆகியவற்றினால் வெளியிடப்பட்டுள்ள யார் எவர் கைந்நூலாகும். இதில் நாயன்மார்கள், ஈழத்துக் கல்விமான்கள், சித்தர்களும் சமாதித் தலங்களும், நீதித்துறை சார்ந்தோர், அந்தணர்கள், இசை மேதைகள், இலங்கையில் வெளிவந்த இந்து சஞ்சிகைகள், வேதபுராண வைஷ்ணவ பரம்பரை, ரிஷிகள்-முனிவர்கள்-துறவிகள், இந்தியத் துறவிகள், நுண்ணறிவாளர்கள், சமய சீர்திருத்தவாதிகள், அரசர்கள், விஞ்ஞானிகள், அரசியல் பிரமுகர்கள், இலக்கிய அகராதிகள், ஈழத்து ஆய்வறிஞர்கள், இலங்கைப் பெரியார்கள், வணக்கத்துக்குரிய பெண்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் பல்வேறு முக்கிய மனிதர்கள் பற்றிய விபரக்கோவையாக இது அமைகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 055002).

ஏனைய பதிவுகள்

100 percent free Revolves No deposit

Articles Blacklisted Real cash Gambling enterprises Well-known Totally free Revolves Slots Within the Canada Create I need to Put People Fund To try out Free

16273 இலண்டனில் தமிழர் திருமணங்கள்.

பொன் பாலசுந்தரம். லண்டன் E7 8PQ : சுடரொளி வெளியீட்டுக் கழகம், 15, Rutland Road, 1வது பதிப்பு, 2018. (சென்னை 600 005 : ஸ்ரீ ராகவேந்திரா லேசர் பிரின்டர்ஸ், 15, தானப்ப