14893 ஏழாலைக் கிராமத்தின் நவமணிகள்: ஏழாலைத் தாய் பெற்றெடுத்த ஒன்பதின்மரின் வாழ்க்கை வரலாறும் சாதனைகளும்.

மு.இந்திராணி. யாழ்ப்பாணம்: ஆத்மஜோதி தியான மணிமண்டபம், ஏழாலை, 1வது பதிப்பு, 2012. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி). vi, 140 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 500., அளவு: 25×18 சமீ. நவமணிகள், நவமணிகளைப் பெற்றெடுத்த ஏழாலை, இராவ்பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள், சித்தாந்த பேரறிஞர் ஐயம்பிள்ளை பொன்னையா அவர்கள், சித்தவைத்திய மூதறிஞர் ஐ.பேரம்பலம் அவர்கள், திரு. சி.முருகேசு உபாத்தியாயர், சித்தாந்த வித்தகர் மு.ஞானப்பிரகாசம் அவர்கள், ஈழத்துச் சிறுகதை முன்னோடி சி.வைத்திலிங்கம் அவர்கள், ஈழத்து தமிழ்ச் சிறுகதை மூலவர் ஆக்க இலக்கிய கர்த்தா இலங்கையர்கோன் அவர்கள், இலக்கிய கலாநிதி பண்டிதர் மு.கந்தையா அவர்கள், ஆத்மஜோதி நா.முத்தையா அவர்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டுள்ள இந்நூலில் ஏழாலைக் கிராமத்தில் பிறந்து அந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்துச் சென்ற சி.வை.தாமோதரம்பிள்ளை (1832-1901), ஐயம்பிள்ளை பொன்னையா (1867-1948), ஐயம்பிள்ளை பேரம்பலம் (1889-1990), சி.முருகேசு உபாத்தியாயர் (1891-1981), மு.ஞானப்பிரகாசம் (1911-1996), சி.வைத்திலிங்கம் (1911-1991), இலங்கையர்கோன் (1915-1961), பண்டிதர் மு.கந்தையா (1917-2001), ஆத்மஜோதி நா.முத்தையா (1918-1995) ஆகிய ஒன்பது பிரமுகர்களின் வாழ்வும் பணிகளும் இக்கட்டுரைகளில் தேடிப் பதிவு செய்யப்பட்டுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21087).

ஏனைய பதிவுகள்

12571 – மாணவர் மஞ்சரி (Student’s Bouquet of Verses in Tamil).

அ.ஜே.ஷாவ்றர். கொழும்பு: அ.ஜே.ஷாவ்றர், தலைமைத் தமிழ்ப் பண்டிதர், பரி.தோமஸ் கலாசாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 1933. (அச்சக விபரம் தரப்படவில்லை). xx, 163 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12.5 சமீ. ‘திரு

12876 – யாழ்ப்பாணப் புவியியலாளன்: இதழ் 4 (1986/1987).

P.குணரத்தினம் (இதழ் ஆசிரியர்), இரா.சிவச்சந்திரன் (ஆலோசக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: நியூ ஈரா பப்ளிக்கேஷன்ஸ் லிமிட்டெட்). (12), 80 பக்கம், தகடுகள், விளக்கப்படங்கள்,

13029 தமிழ் இதழியல் நோக்கும் போக்கும்: பன்னாட்டு இதழியல் கருத்தரங்க ஆய்வுக்கோவை.

தெ.மதுசூதனன், நந்தவனம் சந்திரசேகரன், தி.நெடுஞ்செழியன், உ.பிரபாகரன், (பதிப்பாசிரியர்கள்). திருச்சி 620003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர், 1வது பதிப்பு, 2018. (திருச்சி: இனிய நந்தவனம் பதிப்பகம்).96 பக்கம், விலை:

14535 கண்ணன் எங்கள் கண்ணன்: குழந்தை இலக்கியம்.

செ.யோகநாதன். தெகிவளை: ஏ.ஜே.பதிப்பகம், 44, புகையிரத நிலைய வீதி, 1வது பதிப்பு, 2001. (தெகிவளை: ஏ.ஜே.பதிப்பகம், 44, புகையிரத நிலைய வீதி). 40 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 80.00, அளவு: 21×14.5 சமீ.,

12512 – பன்மை சமூகத்தில் இஸ்லாமிய நெறிமுறைகள்:

அறபுக் கல்லூரிகளுக்கான பாடவிதானத்துடன் தொடர்புடைய ஆவணங்கள். முஸ்லிம்களுக்கான செயலகம். கொகுவல: முஸ்லிம்களுக்கான செயலகம், 165/2, 1/1, துட்டுகெமுனு வீதி, 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). 104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: