மு.இந்திராணி. யாழ்ப்பாணம்: ஆத்மஜோதி தியான மணிமண்டபம், ஏழாலை, 1வது பதிப்பு, 2012. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி). vi, 140 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 500., அளவு: 25×18 சமீ. நவமணிகள், நவமணிகளைப் பெற்றெடுத்த ஏழாலை, இராவ்பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள், சித்தாந்த பேரறிஞர் ஐயம்பிள்ளை பொன்னையா அவர்கள், சித்தவைத்திய மூதறிஞர் ஐ.பேரம்பலம் அவர்கள், திரு. சி.முருகேசு உபாத்தியாயர், சித்தாந்த வித்தகர் மு.ஞானப்பிரகாசம் அவர்கள், ஈழத்துச் சிறுகதை முன்னோடி சி.வைத்திலிங்கம் அவர்கள், ஈழத்து தமிழ்ச் சிறுகதை மூலவர் ஆக்க இலக்கிய கர்த்தா இலங்கையர்கோன் அவர்கள், இலக்கிய கலாநிதி பண்டிதர் மு.கந்தையா அவர்கள், ஆத்மஜோதி நா.முத்தையா அவர்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டுள்ள இந்நூலில் ஏழாலைக் கிராமத்தில் பிறந்து அந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்துச் சென்ற சி.வை.தாமோதரம்பிள்ளை (1832-1901), ஐயம்பிள்ளை பொன்னையா (1867-1948), ஐயம்பிள்ளை பேரம்பலம் (1889-1990), சி.முருகேசு உபாத்தியாயர் (1891-1981), மு.ஞானப்பிரகாசம் (1911-1996), சி.வைத்திலிங்கம் (1911-1991), இலங்கையர்கோன் (1915-1961), பண்டிதர் மு.கந்தையா (1917-2001), ஆத்மஜோதி நா.முத்தையா (1918-1995) ஆகிய ஒன்பது பிரமுகர்களின் வாழ்வும் பணிகளும் இக்கட்டுரைகளில் தேடிப் பதிவு செய்யப்பட்டுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21087).