ந.மயூரரூபன். பருத்தித்துறை: எழினி வெளியீட்டகம், 1வது பதிப்பு, சித்திரை 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 60 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. அமரர் திருமதி கற்பகதேவி நவரத்தினம் (28.4.1945-22.3.2017) அவர்களின் நினைவஞ்சலி மலர். “உடலிலிருந்து உயிர் பிரியும் சம்பவம் மட்டுமல்ல சாவு, அந்தச் சாவுக்கு முன் உணர்வு சூழ்ந்த வாழ்க்கை ஒன்று இருந்தது என்பதை நாம் சில கணங்களில் கடந்து விடுகிறோம். அந்த வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. உண்மையில் சாவின் பின்தான் மனங்கள் விழித்துக்கொள்ளும். அம்மா உயிரோடிருக்கும்போது அம்மாவைப் பற்றி யோசித்திருக்கிறேனா என்கிற கேள்வி என்னைக் குடைகிறது. அம்மாவுடன் ஆறுதலாக இருந்து கதைத்திருக்கிறேனா? அம்மாவின் தனிமையை, மன உளைச்சலை கண்டு கொண்டிருக்கிறேனா? பிள்ளைகளை அம்மாவோடு இன்னும் கொஞ்சம் பொழுது போக்க விட்டிருக்கலாம். மனது அழுந்துகிறது. எல்லாப் பிள்ளைகளும் இப்படித்தான் நினைப்பார்களா? வெந்து போகிறது மனம். இப்படி ஆயிரம் குற்றவுணர்வுக் கேள்விகள் முட்டிமோதிக் கண்ணீரால் நிறைகின்றன. எல்லோருடைய அம்மாவும் அவரவர்க்கு தனித்துவமானவர்கள். எனது அம்மாவின் ஐந்து பிள்ளைகள் சார்பாகவும் அப்பா சார்பாகவும் நான் இந்தப் படையலைச் செய்கிறேன் ” (ந.மயூரரூபன்- முன்னுரையில்).