க.செபரத்தினம் (தொகுப்பாசிரியர்), க.தா.செல்வராசகோபால் (பதிப்பாசிரியர்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், # 3, 1292, Sherwood Mills, Mississauga, Ontario, L5V 1S6 1வது பதிப்பு, சித்திரை 2003. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், # 3, 1292, Sherwood Mills, Mississauga, Ontario, L5V 1S6). xliv, 200 பக்கம், புகைப்படங்கள், விலை: கனேடிய டாலர் 25.00, அளவு: 21×14 சமீ. கிழக்கிலங்கை மண்ணின் புகழ்பூத்த மைந்தர்கள், துறவற நெறியில் நின்று கிழக்கிலங்கை மண்ணின் உயர்ச்சிக்கு உரமான உத்தமர்கள், சிலை வடிவம் பெற்ற செம்மல்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கலாநிதிகள், புகழ்பூத்த மூத்த எழுத்தாளர்கள், அரசியற் தலைவர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள், மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவஞ் செய்திட…, சமய சமூகத் தொண்டர்கள், தமிழ் மொழி வளர்க்கும் புலவர்கள்-வித்துவான்கள்-பண்டிதர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள்-கவிஞர்கள்-எழுத்தாளர்கள், இசைக் கலைஞர்கள்-ஓவிய சிற்பக் கலைஞர்கள், தமிழ் மொழி வளர்க்கும் இஸ்லாமியத் தமிழறிஞர்கள், பின்னிணைப்பு-தமிழறிஞர்கள், கடல் கடந்து தமிழ் வளர்க்கும் தமிழ் மைந்தர்கள், கிழக்கிலங்கையின் படைப்பாளிகளின் நூல் அகரவரிசைத் தொடர்ச்சி ஆகிய 17 அத்தியாயங்களில் இந்நூல் எழுதித் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3193).