கு.குமாரதேவன் நினைவுக் குழு. யாழ்ப்பாணம்: விதை குழுமம், 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). 76 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. குமாரசாமி குமாரதேவன் (10.12.1960-15.11.2019) சமகாலத்தின் மிக முக்கியமான வாசகராகவும் நுண்ணுணர்வுடன் கூடிய விமர்சகராகவும் மிகக் கூர்மையான நினைவாற்றலுடன் அரசியல், இலக்கியம், சமூகம், திரைப்படம் என்று பல்வேறு தளங்களிலும் ஆழ்ந்தகன்ற அறிவும் புலமையும் கொண்டவருமாக எம்மிடையே வாழ்ந்தவர். காரைநகரிலுள்ள கோவளத்தில் பிறந்த குமாரதேவன் அவர்கள் தனது சிறுவயதிலிருந்தே தீவிரமான வாசிப்பிலும் தேடலிலுமாக தன் வாழ்வை கட்டமைத்துகொண்டவர். ஈழத்தில் நடந்த பல்வேறு சமூக, அரசியல், இலக்கியக் கூட்டங்களிலும் உரையாடல்களிலும் பங்கேற்று வந்துள்ள இவர் தன் வாசிப் பினாலும், புலமையினாலும், நேர்படப் பேசுகின்ற பண்பினாலும் அனைவராலும் மதிக்கப்பட்டுவந்தவர். விதை குழுமம், தொன்ம யாத்திரை, புதிய சொல் போன்ற ஊடக, இலக்கிய, சமூக அமைப்புகளில் ஆரம்பம் முதலே ஈடுபாட்டுடன் பயணித்துவந்தவர். குமாரதேவன் பல்வேறு சந்தர்ப்பங்களில் எமக்கான ஆலோசகராக இருந்தும் நெறிப்படுத்தியிருக்கின்றார். 15.12.2019 அன்று நிகழ்ந்த அவரது அஞ்சலி நிகழ்வின்போது நாவலர் வீதியில் உள்ள, தியாகி அறக்கொடை நிலைய (TCT) மண்டபத்தில் இந்நூல் வெளியிடப்பட்டது.
Bar Diner Tableau À La capitale
Aisé Condition Soeurs De Salle de jeu Palais Of Chance Reviews Of Caesars Castel Tropezia Palace Mot : Ce Les Principaux Casinos Un tantinet En