புஷ்பராணி சிவலிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 5: புஷ்பராணி சிவலிங்கம், 35/1, எட்மன்டன் வீதி, கிருலப்பனை, 1வது பதிப்பு, மார்ச் 2013. (கொழும்பு 6: R.S.T. என்டர்பிரைசஸ், 14, W.A. சில்வா மாவத்தை). 164 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ. வானொலிக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படும், பிரபல வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் 24.03.2012 அன்று அமரத்துவமடைந்தமையின் நினைவாக, அவரது நினைஞ்சலிக் குறிப்புகளைத் தாங்கி வெளிவந்துள்ள நூல் இது. கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து கொழும்பு திரும்புவதற்காக புறப்பட்ட வேளையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே காலமாகியுள்ளார். தமிழ் வானொலி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலி சேவையில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ளார். இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாடகங்களில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசிப் பலரது பாராட்டையும் பெற்றதுடன், சிறந்த செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் கடமையாற்றி இளைய தலைமுறை ஒலிபரப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 52910).