14898 நினைவலைகளில் வானொலிக் குயில்: ஒலிபரப்பாளர்களின் மனப்பதிவுகள்.

புஷ்பராணி சிவலிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 5: புஷ்பராணி சிவலிங்கம், 35/1, எட்மன்டன் வீதி, கிருலப்பனை, 1வது பதிப்பு, மார்ச் 2013. (கொழும்பு 6: R.S.T. என்டர்பிரைசஸ், 14, W.A. சில்வா மாவத்தை). 164 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ. வானொலிக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படும், பிரபல வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் 24.03.2012 அன்று அமரத்துவமடைந்தமையின் நினைவாக, அவரது நினைஞ்சலிக் குறிப்புகளைத் தாங்கி வெளிவந்துள்ள நூல் இது. கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து கொழும்பு திரும்புவதற்காக புறப்பட்ட வேளையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே காலமாகியுள்ளார். தமிழ் வானொலி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலி சேவையில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ளார். இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாடகங்களில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசிப் பலரது பாராட்டையும் பெற்றதுடன், சிறந்த செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் கடமையாற்றி இளைய தலைமுறை ஒலிபரப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 52910).

ஏனைய பதிவுகள்

12164 – பன்னிரு திருமுறைத் தோத்திரத் திரட்டு.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். கொழும்பு 2: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், காப்புறுதி இல்லம், 9வது மாடி, 21, வாக்ஷோல் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1992. (கொழும்பு 2:

12944 – வண. கலாநிதி ஹயசிந்து சிங்கராயர் தாவீதடிகளார்.

ஸ்ரீலங்கா புத்தகசாலை. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1971. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி). 33 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 20.5 x 13.5 சமீ.

14096 மட்டுநகர் ; ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ; ஆலய வரலாறு.

த. நாகையா. (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: த.நாகையா, கோட்டைமுனை, 1வது பதிப்பு, ஆடி 1996. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்). (12), 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ. மட்டக்களப்பு ஸ்ரீ