மா.கணபதிப்பிள்ளை (செயலாளர்). கொழும்பு 2: அருளொளி நிலையம், 31/21, டோசன் வீதி, 1வது பதிப்பு, 1996. (கொழும்பு 02: நியூ ராஜன் பிரின்ட், இல.25, கியூ லேன்). 50+(10) பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17 சமீ. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கொழும்பில் ஆத்மீகப் பணியாற்றிவரும் கொழும்பு அருளொளி நிலையம், தனது ஸ்தாபகர் தவத்திரு கார்த்திகேசு சுவாமிகளின் நூறாவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் முகமாக வெளியிட்டு வைத்திருக்கும் சிறப்பிதழ் இது. இச்சிறப்பிதழில், நுதற்கண் (அடியார்க்கடியவன்), இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளைத் தலைவர் ஸ்ரீ மத் சுவாமி ஆத்மகாநந்தாஜீ மஹராஜ் அவர்களின் வாழ்த்துரை, ஆன்மீகம் வாழ்க (தெ.ஈஸ்வரன்), தத்துவ ஞானத் தவச்சாலையின் சத்திய சமரச சன்மார்க்க ஏக காலப் பிரார்த்தனை (அடியார்க்கடியவன்), நிறைஞானியான பூரணன் கார்த்திகேசு ஐயா (சு.கனகரத்தினம்), பேரின்பக் குறள் (சித்ரமுத்தடிகள்), கார்த்திகேசு ஐயா (அடியார்க்கடியவன்), அமைதிக்கு வழி (கார்த்திகேசு சுவாமிகள்), பெத்தாச்சி சொன்ன கதை (சி.பாலசுப்பிரமணியம்), சத்திய சமரச சன்மார்க்கம் (கார்த்திகேசு சுவாமிகள்), நீறு பூத்த நீற்றினன் (பொன்.பரமபாதன்), கார்த்திகேசு சுவாமிகள் காட்டும் வழியும் வகையும் (பத்மா சுந்தரேசன்), 100 ஆண்டு நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு நம் மூதையர் வகுத்த அறநெறிகள், சித்திரமுத்தெனும் சீரார் சிவஞானி, Where are we heading for?( M.Sivarajaratnam), The Out Look of Humanity for the 21st Century (Gnanasironmani Poomani Gulasingam), Impact of Religions on the Development of Humanitarianism (R.Sinnathamby), தவத்திரு கார்த்திகேசு சுவாமிகள் நூற்றாண்டு நினைவாக கொழும்பு அருளொளி நிலையத்தின் தத்துவஞானத் தவச்சாலை, எம் இதயத்தில் மலரும் இனிய நன்றிகள் (மா.கணபதிப்பிள்ளை) ஆகிய படைப் பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. கார்த்திகேசு சுவாமிகள் ஊர்காவற்றுறையில் நாரந்தனையைப் பிறப்பிடமாகவும் கரம்பனை வாழிவிடமாகவும் கொண்டவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24590).
Casiplay Incentive Rules Totally free Your Domain Name revolves
Posts Popular Pages: Your Domain Name Best Casiplay Harbors Live Baccarat Decision Casiplay Cellular Casino – ✅ Available on the cellphones: iphone 3gs / ipad
 
				