14899 அருளொளி: ஸ்ரீ கார்த்திகேசு சுவாமிகள் நூற்றாண்டுச் சிறப்பு மலர் 1896-1996.

மா.கணபதிப்பிள்ளை (செயலாளர்). கொழும்பு 2: அருளொளி நிலையம், 31/21, டோசன் வீதி, 1வது பதிப்பு, 1996. (கொழும்பு 02: நியூ ராஜன் பிரின்ட், இல.25, கியூ லேன்). 50+(10) பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17 சமீ. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கொழும்பில் ஆத்மீகப் பணியாற்றிவரும் கொழும்பு அருளொளி நிலையம், தனது ஸ்தாபகர் தவத்திரு கார்த்திகேசு சுவாமிகளின் நூறாவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் முகமாக வெளியிட்டு வைத்திருக்கும் சிறப்பிதழ் இது. இச்சிறப்பிதழில், நுதற்கண் (அடியார்க்கடியவன்), இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளைத் தலைவர் ஸ்ரீ மத் சுவாமி ஆத்மகாநந்தாஜீ மஹராஜ் அவர்களின் வாழ்த்துரை, ஆன்மீகம் வாழ்க (தெ.ஈஸ்வரன்), தத்துவ ஞானத் தவச்சாலையின் சத்திய சமரச சன்மார்க்க ஏக காலப் பிரார்த்தனை (அடியார்க்கடியவன்), நிறைஞானியான பூரணன் கார்த்திகேசு ஐயா (சு.கனகரத்தினம்), பேரின்பக் குறள் (சித்ரமுத்தடிகள்), கார்த்திகேசு ஐயா (அடியார்க்கடியவன்), அமைதிக்கு வழி (கார்த்திகேசு சுவாமிகள்), பெத்தாச்சி சொன்ன கதை (சி.பாலசுப்பிரமணியம்), சத்திய சமரச சன்மார்க்கம் (கார்த்திகேசு சுவாமிகள்), நீறு பூத்த நீற்றினன் (பொன்.பரமபாதன்), கார்த்திகேசு சுவாமிகள் காட்டும் வழியும் வகையும் (பத்மா சுந்தரேசன்), 100 ஆண்டு நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு நம் மூதையர் வகுத்த அறநெறிகள், சித்திரமுத்தெனும் சீரார் சிவஞானி, Where are we heading for?( M.Sivarajaratnam), The Out Look of Humanity for the 21st Century (Gnanasironmani Poomani Gulasingam), Impact of Religions on the Development of Humanitarianism (R.Sinnathamby), தவத்திரு கார்த்திகேசு சுவாமிகள் நூற்றாண்டு நினைவாக கொழும்பு அருளொளி நிலையத்தின் தத்துவஞானத் தவச்சாலை, எம் இதயத்தில் மலரும் இனிய நன்றிகள் (மா.கணபதிப்பிள்ளை) ஆகிய படைப் பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. கார்த்திகேசு சுவாமிகள் ஊர்காவற்றுறையில் நாரந்தனையைப் பிறப்பிடமாகவும் கரம்பனை வாழிவிடமாகவும் கொண்டவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24590).

ஏனைய பதிவுகள்

12320 – சுதந்திரத்திற்கான கல்வி-அபிவிருத்தி, தனிப்பட்ட இலக்குகள், சமூக முன்னுரிமைகள் ஆகியன தொடர்பான பிரச்சினைகள்.

லக்ஷ்மன் ஜயத்திலக்க. மகரகம: கல்வி ஆராய்ச்சித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1994. (மகரகம: தேசிய கல்வி நிறுவகம்). 34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ. 20.10.1994

Spend My Home-based Expenses

Posts Playing with Shell out By Cellular phone To own Gambling enterprise Withdrawals Build A charge for Members of the family Or Family members Cellular

12058 – தொடக்குந் தொடர்பும் அல்லது ஆசௌச விளக்கம்.

சி.அப்புத்துரை, சு.செல்லத்துரை. கொழும்பு 6: வி.மனோன்மணி, யாழ்.தெல்லிப்பழை விஜயரத்தினம் விமலநாதன் அந்தியேட்டித் தின வெளியீடு, 27/12, பரக்கும்பா பிளேஸ், 1வது பதிப்பு, ஜுலை 2002. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). xxi, 56 பக்கம்,

14084 சைவ நெறி: தரம்8.

இ.மகேந்திரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு: நூல் வெளியீட்டுக் குழு, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுருபாயா, பத்தரமுல்ல, 1வது பதிப்பு 2016 (கொழும்பு: சென்வின் தனியார் நிறுவனம், இல. 35/3, கேரகல வீதி, ஹெலும்மஹர, தெல்கொட). xiiஇ