ச.பஞ்சாட்சர சர்மா (மலர் ஆசிரியர்). கோப்பாய்: குருக்கள் பாராட்டுவிழாச் சபை, 1வது பதிப்பு, 1971. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி). (10), 84 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×18.5 சமீ. இம்மலரில் வாழ்த்துரைகள், பாராட்டுரைகள், ஆசியுரைகளுடன், சிறப்புக் கட்டுரைகளாக, குருபக்தி (காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகள்), சிவஞானபோத முதனூல் (சிவஸ்ரீ ஈசான சிவாசாரியர்), சைவசமய சாத்திரங்கள் (சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்கள்), எம்மொழியில் அர்ச்சனை? (சுவாமி சித்பவானந்தர்), சிவஞான சித்தியாரின் தனி மாண்பு (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை), பீஜாக்ஷரம் (பிரம்மஸ்ரீ தி.கி.சீதாராம சாஸ்திரிகள்), ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி (பூ.தியாகராஜ ஐயர்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. “குருக்கள் கட்டுரைக் கோவைகள்” என்ற பிரிவில், சோ.சுப்பிரமணியக் குருக்கள் எழுதியவற்றுள் தெரிந்தெடுத்த கட்டுரைகளாக, தீர்த்த மகிமை, யோகசித்தி, திருஞானசம்பந்தர் உட்கொண்ட ஞானப்பால், சைவ சமயிகளும் சிறுதெய்வ வழிபாடும் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. சித்தாந்தபாநு சோ.சுப்பிரமணியக் குருக்களின் பாராட்டுவிழா மலர்க் குழுவில் க.சி.வினாசித்தம்பி, க.இராசரத்தினம், சி.சுந்தரசிங்கம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 039847).