14903 தண்டபாணீயம்: வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பிரதமகுரு சிவஸ்ரீ சோமாஸ்கந்த தண்டபாணிக தேசிகர் அவர்களின் மணிவிழா மலர்.

மணிவிழாச் சபை. வல்வெட்டித்துறை: ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம், 1வது பதிப்பு, நவம்பர் 2004. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா அச்சகம், நெல்லியடி). (8), 117 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ. வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பிரதமகுருவும், சிவாச்சாரிய பீடாபதியும், அகில உலக சைவக்குருமார் சம்மேளனத்தினதும், வேதாரண்ய குரு பரம்பரை சைவக்குருமார் அச்சகர்களின் நிறுவகத்தினதும் நிர்வாகியுமாகிய சிவஸ்ரீ சோமாஸ்கந்த தண்டபாணிக தேசிகரின் ஷஸ்டியப்த பூர்த்தி மணிவிழாவை 24.11.2004 அன்று கொண்டாடிய வேளையில் வெளியிடப் பெற்ற சிறப்பு மலர் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48315).

ஏனைய பதிவுகள்