14904 திருவாசகம் ஸ்ரீசபாரத்தினம் சுவாமிகள் நினைவு மலர்.

த.துரைராசா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: ஸ்ரீசபாரத்தினம் சுவாமிகள் தொண்டர் சபை, 5ஆவது ஆண்டு குருபூசை நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, ஜனவரி 1993. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). (28) பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 21.5×14.5 சமீ. கொழும்பு 13, லக்ஷ்மி அச்சகத்தினரும் கொழும்பு 13, வீமாஸ் பிரிண்டர்ஸ் நிறுவனத்தினரும் அன்பளிப்பாக வழங்கியுள்ள பிரசுரம் இது. திருக்கேதீஸ்வரத்தில் திருவாசக மடத்தை முதலில் ஸ்தாபித்தவர் சபாரத்தினம் சுவாமிகளாவார். அவரைப்பற்றிய இந்த நினைவு மலர், ஸ்ரீசபாரத்தினம் சுவாமிகளின் வாழ்வினையும் அவர் ஆற்றிச்சென்ற சிவப்பணிகளையும் நினைவுகூர்வதாக அமைந்துள்ளது. அவர் பற்றிய வாழ்த்துரைகளை, வாழ்த்துக் கவிதைகளை, வாழ்வும் பணிகளும் பற்றிய குறிப்புக்களை அன்னாரின் தொண்டரடியார்களான கவிமாமணி, சிங்கையாழியான், வே.கெ.தனபாலன், ப.கோபாலகிருஷ்ணன், தங்கம்மா அப்பாக்குட்டி, க.கனகராசா, இரா.மகேந்திரசிங்கம், கரவைக்கிழார், ஆழ்கடலான், க.சி.குலரத்தினம், ஈழத்துச் சிவானந்தன், க.துரைராசா, த.துரைராசா, முருக-வே. பரமநாதன், செ.ஞானசேகரம், கே.பி.நடனசிகாமணி போன்றோர் இம்மலரில் வழங்கியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 16710).

ஏனைய பதிவுகள்

Content Conseils De Paris, France Xbet Sénégal Faire El Dépôt Parier En Direct Avec Le Code Promo 1xbet L’ensemble Des Noms Des Stars Du Football

14907 நாவலர் மாநாடு விழாக் காட்சிகள் 1969.

நாவலர் மாநாட்டுக் குழு. கொழும்பு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, 1வது பதிப்பு, நவம்பர் 1969. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு). 94 தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14873 எனது பேனாவில் இருந்து.

கரவை மு.தயாளன். லண்டன்: T.G.L.வெளியீடு, 1வது பதிப்பு, ஜுன் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 239 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12.5 சமீ., ISBN: 978-0- 9935325-8-0. அரசியலோடு இணைந்த சமூக வெளிப்பாடும்

12046 – இந்து மதம் என்ன சொல்கிறது: பாகம் 4: இறை நோக்கிய பயணம்.

திருமதி. ஞானம் ஞானசேகர ஐயர். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3டீ, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). viii, 136 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14

12022 – அனர்த்த காலங்களில் நெருக்கீடுகளை எதிர்கொள்ளல்.

அனர்த்தகால உளநலப் பணிக்குழு. யாழ்ப்பாணம்: சாந்திகம், 15, கச்சேரி-நல்லூர் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல.681, காங்கேசன்துறை வீதி). 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×14