மலர்க் குழு. கீரிமலை: பவளவிழாச் சபை, நகுலேஸ்வர தேவஸ்தானம், 1வது பதிப்பு, டிசம்பர் 2000. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (16), 160 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18 சமீ. 03.12.2000 அன்று வெளியிடப்பெற்ற இச்சிறப்பு மலரில் வாழ்த்தி வணங்குவோம், பாடிப் பரவுவோம், குருவும் கோயிலும், பழமையின் பெருமை, நகுலேஸ்வரப் பிரபந்தங்கள், நகுலேஸ்வரப் புதுப்பொலிவு ஆகிய ஆறு பிரிவுகளில் ஆக்கங்கள் வகுத்துத் தரப்பட்டுள்ளன. பவளவிழா நாயகருக்கான ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், குருவும் கோயிலும், பிரம்மஸ்ரீ கு.நகுலேஸ்வரக் குருக்கள் அவர்களின் வாழ்வுச்சீர் (பிரம்மஸ்ரீ சு.து.சுந்தரமூர்த்திக் குருக்கள்), நான் கண்ட நகுலேஸ்வரக் குருக்கள் (நாதஸ்வர வித்துவான் கலாசூரி என்.கே. பத்மநாதன்), Case of the missing idols:Vandalism or sacrilege? கீரிமலைச் சிவன் கோவில் அன்றும் இன்றும் (பேராசிரியர் கலாநிதி ப.கோபாலகிருஷ்ண ஐயர்), Shri Naguleswaram Shivan Temple Keerimalai History and Sanctity (A.Visvanathan), Shivasiri K.Naguleswara Kurukkal and His Achievements (A.Visvanathan), தலத்தின் தொன்மையும் குருவின் செம்மையும் (ச.சிவதாசன்), கீரிமலை நகுலேஸ்வரம் பற்றிய தகவல் திரட்டுதல் (சைவப்புலவர் சு.செல்லத்துரை), முப்பெரும் பழம்பதிகள் பற்றிய ஆய்வின் தேவை (சு.சுசீந்திரராசா), ஆலயத்தில் அறிவூட்டல் – புராணபடனம் – தெல்லிப்பழையிற் கல்வி, கீரிமலையிற் சைவாலயங்கள், கீரிமலையில் காவிய பாடசாலை (வித்துவசிரோமணி சி.கணேசையர்), கீரிமலைச் சிவன் கோயில் (ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் 1878-05-24 இல் வெளியிட்ட துண்டுப் பிரசுரம்), கீரிமலைச் சிவன் கோயில் (அ.குமாரசுவாமிப்பிள்ளை), நகுலேஸ்வரப் பிரபந்தங்கள், நகுலேஸ்வரப் புகழ்மாலை (புலவர் வை.க.சிற்றம்பலம்), கீரிமலை நகுலேசர் ஊஞ்சல் (அ.குமாரசுவாமிப் புலவர்), நகுலேஸ்வரம் – புதுப்பொலிவு: பிரம்மஸ்ரீ கு.நகுலேஸ்வரக் குருக்கள் ஒரு செவ்வி (செவ்வி கண்டவர்: சைவப்புலவர் சு.செல்லத்துரை) ஆகிய படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24283).
Best You Real time Blackjack Casinos online 2024 Gamble Today
Articles Bonuses & Offers Step 4: Take your Seat From the Dining table 🎰 DruckGluck: Live agent casino with greatest payout rate Secure and safe