நாவலர் மாநாட்டுக் குழு. கொழும்பு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, 1வது பதிப்பு, நவம்பர் 1969. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு). 94 தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 16.5×19 சமீ. ஆறுமுக நாவலர் திருவுருவச் சிலை யாழ்ப்பாண மாநகரசபை முன்றலில் இருந்து இரத ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அவர் பிறந்த பதியில்-நல்லூரில் நிறுவப்பட்டது. அவ்வேளை நாவலர் மாநாடு-பெருவிழா என்பனவும் 1969 ஜுன் 29, 30, ஜுலை 1, 2 ஆகிய நாட்களில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையின் நாவலர் மாநாட்டுக் குழுவினரால் நாடளாவிய ரீதியில் கலை நிகழ்ச்சிகளுடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. மதுரை மகா சந்நிதானம் உள்ளிட்ட பல பிரமுகர்கள் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்தனர். நாவலர் தொடர்பான பல காட்சிகளைத் தாங்கிய ஊர்திகளின் பவனியும் இடம்பெற்றிருந்தது. அவ்வேளையின் நிகழ்வுகளை புகைப்படங்களாக, குறிப்புரையுடன் ஆக்கி, ஒரு நிரந்தர வரலாறாக இந்நூல் பதிவுசெய்கின்றது. 100 படங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 26841).
Appareil Vers Thunes Gratis Da Vinci Diamonds
Satisfait Gamomat emplacements de jeu | Envoyez Aux denrées Parfaites : Pourrez En Appoint Profond Avec La necessité De choisir Un Salle de jeu Un