14908 மூதறிஞர் பண்டிதர் சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின் திருத்தொண்டு பரவும் மலர்.

கே.கே.சுப்பிரமணியம் (பதிப்பாசிரியர்). தெகிவளை: கே.கே. சுப்பிரமணியம், 28, இரத்தினகார இடம், 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 110 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12.5 சமீ. ஈழத்துச் சிதம்பரப் பிரதம குருவாக அணிசெய்த ச.கணபதீசுவரக் குருக்கள், சிவயோகசுந்தராம்பாள் தம்பதியரின் மகனாக 22.09.1916 இல் பிறந்தவரே வைத்தீசுவரக் குருக்கள். ஆரம்பக் கல்வியை காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையிலும் உயர்கல்வியை அளவெட்டி அருணோதயக் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டார். சமஸ்கருதக் கல்வியை பி.வி.சிதம்பர சாஸ்திரிகளிடம் பெற்ற இவர் தமிழ்ப் பண்டிதர் கல்வியை மகாவித்துவான் சி.கணேசையரிடம் பெற்றுக்கொண்டார். 1940 இல் கொழும்பு விவேகானந்தக் கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்று திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்று 1970 இல் அரச பணியில் இருந்து இளைப்பாறினார். வைத்தீசுவரக் குருக்கள் காரைநகர் மணிவாசகர் சபையை 1940 ஆம் ஆண்டில் நிறுவியிருந்தார். ஈழத்துச் சிதம்பரத்தைத் தளமாகக் கொண்டு இச்சபை முன்னெடுத்துவரும் திருவாசக விழா மிகவும் பிரபலமானது. இன்றும் அந்த விழாவை குருக்கள் காட்டிய வழியில் அச்சபையினர் முன்னெடுத்து வருகின்றனர். 1970 ஆம் ஆண்டில் இச்சபையின் ஊடாக துர்க்கா துரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டிக்கு சிவத்தமிழ்ச்செல்வி என்ற கௌரவப் பட்டத்தைக் குருக்களே வழங்கினார். 1960 ஆம் ஆண்டில் காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பையும் குருக்கள் அவர்கள் நிறுவியிருந்தார். இவ்வாறு வடமொழியாகிய சமஸ்கிருதத்தையும் தென்மொழியாகிய தமிழையும் தன்னிரு கண்களாகப் போற்றி வழுத்திய பெருந்தகையாகவே குருக்கள் திகழ்ந்தார். குருக்கள் அவர்கள் எழுதியும் தொகுத்தும் வழங்கிய நூல்களில் ஈழத்துச் சிதம்பர புராணச் சுருக்கம், காரைநகரில் சைவசமய வளர்ச்சி, தொடர்மொழிக்கு ஒரு சொல், க.பொ.த. மாணவர்களுக்கான தமிழ்ப் பயிற்சி நூல்கள், காரைநகர் மணிவாசகர் சபையின் பொன்விழா மலர், காரைநகர் சைவமகா சபையின் பொன்விழா மலர், திருவாதிரை மலர்கள், ஈழத்துச் சிதம்பர கும்பாபிஷேக மலர் (1970), வியாவில் ஐயனார் கோவில் கும்பாபிஷேக மலர் என்பவையும் அடங்கும். குருக்களின் தமிழியற் சேவைகளை நயந்து அகில இலங்கைக் கம்பன் கழகம் 1995 இல் மூதறிஞர் என்ற விருது வழங்கிக் குருக்களுக்கு மதிப்பளித்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2001 ஆம் ஆண்டில் கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கிப் பெருமை சேர்த்தது. பண்டிதர் க.வைத்தீசுவரக் குருக்கள் தனது 99 ஆவது வயதில் இவ்வுலகை வாழ்வை நிறைவு செய்துள்ளார். அவர் வாழும்காலத்தே அவர் பணிகள் பற்றிய தொகுப்பாக இச்சிறப்பிதழ் வெளிவந்திருந்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 31331).

ஏனைய பதிவுகள்

Wheres The Gold Slot Review

Content 30 freie Spins rocky – Warum Sollten Sie De Few Keys Online Spielen? Die Bewertungen Zu “midas Golden Touch” Spielen Sie Where S The

Permalink: Permalink

Content Datenschutzeinstellungen Ended up being wird eine Parataxe? – Wichtigkeit, Wirkung & Vorzeigebeispiel Online Workshop zur Weiterverarbeitung von Fußballspielaufnahmen – 1 Std. (1.Fall)Welches Verb des

Starburst Position Gioca Gratis

Articles Informação Manage Gambling enterprise Starburst Ports Game: A rush From Superstar Demanded Starburst Gambling enterprises For sale in The uk To own 2024 Browse