ஸ்ரீ பிரசாந்தன் (மலராசிரியர்). கொழும்பு: பிரதிஷ்டாசிரோன்மணி பிரம்மஸ்ரீ சாமி விஸ்வநாதக் குருக்கள் அவர்களது எழுபத்தைந்தாவது அகவை நிறைவு விழா நினைவுக் குழு, 1வத பதிப்பு, 2001. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). viii, 115 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19.5 சமீ. அளி வந்த அந்தணைப் பாடுதுங்காண் அம்மானாய் (ஸ்ரீ பிரசாந்தன்), நவாலி தந்த நவநிதியம் (வாழ்க்கை வரலாறு), குருக்கள் ஐயா அவர்கட்கு வழங்கிய பட்டங்களும் வழங்கிய ஆலயங்களின் விபரமும், குருக்கள் ஐயா அவர்கள் சேவையாற்றிய ஆலயங்கள் ஆகிய விபரங்களைத் தொடர்ந்து “அருள்” என்ற முதலாவது பிரிவில் ஆசிச்செய்திகளும், ‘அன்பு” என்ற இரண்டாவது பிரிவில் வாழ்த்துச் செய்திகளும், வாழ்த்துக் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. “ஆக்கம்” என்ற மூன்றாம் பிரிவில், அந்தணர்களுக்குரிய நாற்பது ஸம்ஸ்காரங்கள் (ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார்), அஷ்ட மூர்த்தம் -எட்டுரு (ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள்), வீரசைவம் (சாந்தலிங்க இராமசாமி அடிகளார்), சைவ சமய வளர்ச்சியில் ஆதிசைவர்களின் பங்கு (கோ.வி.கணேச சிவாச்சாரியார்), சைவ சமயச் சின்னங்கள் (என்.இராமநாத சிவாச்சாரியார்), சிவாகமத்தில் அருளிய கும்பாபிஷேகக் கிரியை (பா.சிவசண்முக சுந்தரக் குருக்கள்), சைவ சித்தாந்தமும் சிவாலயங்களும் (சிவஸ்ரீ மு.பரமசாமிக் குருக்கள்), சேக்கிழாரும் சித்தாந்தமும் (சி.அருணைவடிவேல் முதலியார்), சைவ சித்தாந்தம் (க.வச்சிரவேல் முதலியார்), வைணவத்தின் சிறப்பு (ஸ்ரீ அண்ணங்கராச்சாரியார்), சித்த யோக விளக்கம் (சுத்தானந்த பாரதியார்), சைவ ஆகமங்கள் (இரா.செல்வக்கணபதி), ஆலய அமைப்புக்கள் (பெ.திருஞானசம்பந்தன்), வகுத்தான் வகுத்த வகை (மு.சிவச்சந்திரன்), பெரிய புராணத்தில் சிவ அன்பு (சிவ.சண்முக வடிவேல்), தெய்வ நம்பிக்கையை இழக்கக் கூடாது (சந்திப்பு: தே.செந்தில் வேலவர்) ஆகிய கட்டுரைகளும், “அழகு” என்ற இறுதிப்பிரிவில் பிரதிஷ்டாசிரோன்மணி பிரம்மஸ்ரீ சாமி விஸ்வநாதக் குருக்கள் அவர்களது வாழ்வின் முக்கிய கணப்பொழுதுகளின் தேர்ந்த புகைப்படச் சான்றுகளும் தொகுக்கப்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23993).
Power from Thor Megaways
Content Snow Honeys casino slot | Go to the Windy North Mountains Free revolves inside Thor: Hammer Date Payouts on the Thor Wonder Slots You’lso