14911 அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகள்: புதிய வெளிச்சம்.

அனிஸ்டஸ் ஜெயராஜா. சாய்ந்தமருது 05: மருதம் கலை இலக்கிய வட்டம், 129B, ஒஸ்மான் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (கொழும்பு 14: டலஸ் கிராப்பிக்ஸ்). viii, 56 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-51026-1-2. நிரந்தர இலட்சியங்களுக்காக, யார் இவர், அஷ்ரஃப் சகாப்தம் ஓர் அறிமுகம், ஹிரா, கருக்கல், புதிய வெளிச்சம், இமயம், மணிக்கூடு, காதுப்பூ-மின்னி, சீர்திருத்தம், விஸ்வரூபம், உரிமை எனும் ஊர், அஷ்ரஃப் ஏன் படிக்கப்படவேண்டும் ஆகிய அத்தியாயங்களினூடாக முஸ்லிம் மக்களின் அரசியல் தலைவர் அஷ்ரஃப் அவர்களின் வாழ்க்கைப் பாதை விபரிக்கப்பட்டுள்ளது. வறுமையிலும் செம்மையாக வாழ்வதற்கு, துயரங்களையும் பிரச்சினைகளையும் கண்டு துவண்டுவிடாமல் இருப்பதற்கு, உயர்ந்த சிந்தனைகளுக்கான உழைப்பு ஒருபோதும் வீண்போவதில்லை என்ற எடுத்துக்காட்டுக்கு, முடிவுகள் எதுவானாலும் தள்ளிப்போடாமல் துணிவுடன் எதிர்கொள்வதற்கு, முரண்பாட்டாளர்களையும் அணைத்துச் செல்வது எப்படி என்பதற்கும், அரசியல் இராஜதந்திரத்தில் மிக நுட்பமான வழிமுறைகளைக் கையாள்வதற்கும் அஷ்ரஃப் படிக்கப்படவேண்டியவர் என்பதை இந்நூல் வலியுறுத்துகின்றது.

ஏனைய பதிவுகள்