எம்.எஸ்.எம்.அனஸ். புத்தளம்: இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம், 1வது பதிப்பு, மே 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (4), 188 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் முதலாவது முஸ்லிம் சபாநாயகர் என்ற பேற்றைப் பெறுபவர் மர்ஹ_ம் அல்ஹாஜ் எச்.எஸ்.இஸ்மாயில் அவர்களாவார். இவர் ஓர் அரசியல்வாதியாக அறியப்பட்டாலும் சமுதாயப் பற்றுள்ள தலைவராக உழைத்தவர். புத்தளத்தின் பூர்வீகக் குடும்பத்தைச் சார்ந்த இவர் 19.05.1901 அன்று பிறந்தார். புத்தளம் சென் அன்ரூஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் கொழும்பு வெஸ்லி கல்லூரியில் உயர் வகுப்புக் கல்வியையும் ஆங்கில மொழி மூலம் கற்றார். 1920 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் சிரேஷ்ட பரீட்சையில் சித்தியடைந்த இவர், 1921 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் நுழைந்தார். 1925 ஆம் ஆண்டு புத்தளம் மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் சட்டத்தரணி என்ற பெயருடன் வெளியேறினார். பொதுச் சேவையில் அவருக்கிருந்த ஈடுபாடு காரணமாக 1928 ஆம் ஆண்டு புத்தளம் உள்ளூராட்சி மன்ற (டுழஉயட டீழயசன) தலைவராகப் போட்டியின்றித் தெரிவானார். 1944 இல் கல்விக் கழகம் என்ற கல்வி மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். இதே கால கட்டத்தில் ஸாஹிராக் கல்லூரியின் கிளை புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அன்னாரின் நினைவாக புத்தளம் ஸாஹிராக் கல்லூரியின் கட்டிடமொன்றுக்கு அவரது நாமம் சூட்டப்பட்டது. இந்நூல் ஒரு முற்குறிப்பு, சமூக சேவையாளரின் தோற்றம், அரசியலும் மொழிப் பிரச்சினையும், மொழிப் பிரச்சினையில் முஸ்லீம்கள், இலங்கை பைத்துல்மால், சமூக சேவையும் முஸ்லிம்களும், கல்விப் பணிகள், முஸ்லிம் பாடசாலைப் பிரச்சினையும் சோனகர்-முஸ்லிம் இணக்கமும், கூட்டுறவு இயக்கமும் வளர்ச்சியும், சமூக பொருளாதார நடவடிக்கைகள், பேராதனைப் பல்கலைக்கழக மஸ்ஜித், இஸ்மாயிலின் நாட்குறிப்பேடு, Extracts from H.S.Ismail’s Diary, குறிப்புகள் ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் அமரர் அல்ஹாஜ் எச்.எஸ்.இஸ்மாயிலின் சமூக அரசியல் பணிகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31370).
Your dog Family Position Browse the Report on the video game From Europa casino android Practical Play
Content Am i able to earn money regarding the demo variation?: Europa casino android Strength from Merlin Megaways Canine Household – Regal Hunt Analysis by