14914 எச்.எஸ்.இஸ்மாயில்: ஒரு சமூக அரசியல் ஆய்வு.

எம்.எஸ்.எம்.அனஸ். புத்தளம்: இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம், 1வது பதிப்பு, மே 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (4), 188 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் முதலாவது முஸ்லிம் சபாநாயகர் என்ற பேற்றைப் பெறுபவர் மர்ஹ_ம் அல்ஹாஜ் எச்.எஸ்.இஸ்மாயில் அவர்களாவார். இவர் ஓர் அரசியல்வாதியாக அறியப்பட்டாலும் சமுதாயப் பற்றுள்ள தலைவராக உழைத்தவர். புத்தளத்தின் பூர்வீகக் குடும்பத்தைச் சார்ந்த இவர் 19.05.1901 அன்று பிறந்தார். புத்தளம் சென் அன்ரூஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் கொழும்பு வெஸ்லி கல்லூரியில் உயர் வகுப்புக் கல்வியையும் ஆங்கில மொழி மூலம் கற்றார். 1920 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் சிரேஷ்ட பரீட்சையில் சித்தியடைந்த இவர், 1921 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் நுழைந்தார். 1925 ஆம் ஆண்டு புத்தளம் மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் சட்டத்தரணி என்ற பெயருடன் வெளியேறினார். பொதுச் சேவையில் அவருக்கிருந்த ஈடுபாடு காரணமாக 1928 ஆம் ஆண்டு புத்தளம் உள்ளூராட்சி மன்ற (டுழஉயட டீழயசன) தலைவராகப் போட்டியின்றித் தெரிவானார். 1944 இல் கல்விக் கழகம் என்ற கல்வி மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். இதே கால கட்டத்தில் ஸாஹிராக் கல்லூரியின் கிளை புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அன்னாரின் நினைவாக புத்தளம் ஸாஹிராக் கல்லூரியின் கட்டிடமொன்றுக்கு அவரது நாமம் சூட்டப்பட்டது. இந்நூல் ஒரு முற்குறிப்பு, சமூக சேவையாளரின் தோற்றம், அரசியலும் மொழிப் பிரச்சினையும், மொழிப் பிரச்சினையில் முஸ்லீம்கள், இலங்கை பைத்துல்மால், சமூக சேவையும் முஸ்லிம்களும், கல்விப் பணிகள், முஸ்லிம் பாடசாலைப் பிரச்சினையும் சோனகர்-முஸ்லிம் இணக்கமும், கூட்டுறவு இயக்கமும் வளர்ச்சியும், சமூக பொருளாதார நடவடிக்கைகள், பேராதனைப் பல்கலைக்கழக மஸ்ஜித், இஸ்மாயிலின் நாட்குறிப்பேடு, Extracts from H.S.Ismail’s Diary, குறிப்புகள் ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் அமரர் அல்ஹாஜ் எச்.எஸ்.இஸ்மாயிலின் சமூக அரசியல் பணிகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31370).

ஏனைய பதிவுகள்

14634 பள்ளத்தாக்கில் சிகரம்.

ராஜகவி றாஹில். நிந்தவூர்-05: கரீமா ராஹில், ஆர்.கே. மீடியா, 318, புதிய நகரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (மாவனல்லை: பாஸ்ட் கிராப்பிக்ஸ்). xii, (4), 86 பக்கம், விலை: ரூபா 200., அளவு:

13017 ஈழநாதம்-வன்னிப் பதிப்பு: முதலாண்டு நிறைவு மலர் 1994.

மலர்ஆசிரியர் குழு. கிளிநொச்சி: ஈழநாதம் அலுவலகம், 1வது பதிப்பு, 1994. (கிளிநொச்சி: சந்திரன் பதிப்பகம்).165 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 150.00, அளவு: 23.5×18 சமீ. ஈழநாதம் நாளிதழ் 19.02.1990 யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தனது

12665 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1983.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 1984. (கொழும்பு: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). (12), 198 பக்கம், ஒxxxvii,

12864 – பொச்சங்கள்.

வ.அ.இராசரெத்தினம். திருக்கோணமலை: கல்வி, பண் பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1999. (திருக்கோணமலை: அச்சகத் திணைக்களம், வடக்குகிழக்கு மாகாண அரசு). (16), 17-175 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14288 யாழ்ப்பாணத்தின் மன்றாட்டம்.

எஸ்.ஜி.புஞ்சிஹேவா (சிங்கள மூலம்), எம்.எச். எம்.ஷம்ஸ் (தமிழாக்கம்). இராஜகிரிய: ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கான இயக்கம், 1149, கோட்டே வீதி, 1வது பதிப்பு, மே 1998. (தெகிவளை: சரண பதிப்பகம், சரணங்கார வீதி). 28 பக்கம்,

12093 – இந்து தருமம் 1991-1992: பேராதனை பல்கலைக்கழக பொன்விழா சிறப்பு மலர்.

த.வேலுப்பிள்ளை (இதழாசிரியர்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, நவம்பர் 1992. (கண்டி: செனித் அச்சகம், 192, கொட்டுகொடல்ல வீதி). x, 104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5