14915 என் பெயர் விக்டோரியா: நதியைக் கடக்க முனைந்தவள்.

தொந்தா விக்டோரியா (ஸ்பானிய மூலம்), தேவா (தமிழாக்கம்). சென்னை 600005: வடலி வெளியீடு, பி-55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 220 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-1-7752 392-0-8. அர்ஜென்டீனாவில் 1976-இல் நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்பு அதன் வரலாற்றிலேயே கர்ணகொடூரமானதான சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுத்தது. முப்பதாயிரம் வரையான மக்கள் கடத்தப்பட்டார்கள். சித்திரவதைக்குள்ளானார்கள். ஈற்றில் “காணாமல் போனார்கள்”. அக் காலத்தில்தான் கர்ப்பிணிகளாயிருந்த அரசியல் கைதிகளுக்குப் பிறந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருண்மைக்குள் சபிக்கப்பட்டிருந்த அவர்களது தாய்மாரிடமிருந்து திருடப்பட்டு இராணுவத்துடன் தொடர்புடையவர்களிடமோ அந்த சர்வாதிகார ஆட்சிக்குத் துணை போனவர்களிடமோ ஒப்படைக்கப்பட்டார்கள். அவ்வாறு கொடுக்கப்பட்ட குழந்தைகளில் ஒருத்திதான் “அனாலியா”. தான் தத்தெடுக்கப்பட்டவள் என்பதையே சந்தேகிக்காது வளர்ந்த அவள், தனது 27வது வயதில் தான் தனது பெற்றோர் தனதல்லர் என்றும் தனது பெயரே தன்னுடையது அல்லவென்றும் அறிகிறாள். “எனது பெயர் விக்ரோரியா” எனும் இந்நூலில் தனது கதையை அனாலியா அல்ல விக்ரோரியாவே எழுதிச் செல்கிறாள். அதன் பக்கங்கள் ஊடே ப்யூனஸ் அயர்ஸின் புறநகர் பகுதிகளில் ஒரு செழிப்புமிக்க மத்தியதரவர்க்கத்தில் வளர்ந்தவளான தீவிர அரசியல் பிடிப்புகளை உடைய ஓர் இளம் பெண்ணை நாம் அறிகிறோம். தன் உற்றவராய் எண்ணியிருந்தவர்களே தனது பெற்றோரின் கொலைக்கும் பின்னர் தான் கடத்தப்பட்டு தத்தெடுக்கப்பட்டதற்கும் காரண கர்த்தாக்களுமானவர்கள் என்பதை அறிவதிலிருந்தே தனது அடையாளங்கள் குறித்த உண்மையைத் தேடிய அவளது பயணமும் தொடங்கியது. இன்று விக்ரோரியா அர்ஜென்டீன பாராளுமன்றத்தில் மிக இளம் வயது உறுப்பினர். தனது அடையாளத்தையும் சொந்தப் பெயரினையும் மீட்டுக்கொண்டு விட்டவர். இன்று அவர் அனாலியா அல்ல, விக்ரோரியா டொண்டா. ஸ்பானிய மொழியில் எழுதப்பட்ட இந்தப்புத்தகம் னுசு.ளுவநகயnநை முயசப இனால் ஜேர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அதன் வழியாகத் தேவாவினால் தமிழுக்கு கொண்டு வரப்படுகிறது.

ஏனைய பதிவுகள்

14682 ஈழத்து உளவியற் சிறுகதைகள்.

கே.எஸ்.சிவகுமாரன் (ஆசிரியர்), லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 94:

14838 கலை இலக்கிய கட்டுரைகள்.

எஸ்.மோசேஸ். மட்டக்களப்பு, எஸ்.மோசேஸ், கிருஷி வெளியீடு, 1வது பதிப்பு, 2010. (மட்டக்களப்பு: R.S.T. என்டர்பிரைசஸ்). x, 11-140 பக்கம், விலை: ரூபா 475., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-51403-2-4. இந்நூலில் கலை-இலக்கியம் தொடர்பான

14747 உறவும் பிரிவும்.

மு.ளு.ஆனந்தன். யாழ்ப்பாணம்: இணுவில் தமிழ்மன்ற வெளியீடு, இணுவில், 1வது பதிப்பு, நவம்பர் 1964. (சுன்னாகம்: நாமகள் அச்சகம்). (2), 61 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 20×13.5 சமீ. காதலை முதன்மைப்படுத்தும் இக்குறுநாவலில்

14223 நல்லை நாற்பது: பக்திக் கீர்த்தனைப் பாடல்கள்.

சி.கார்த்திகேசு (புனைபெயர்: சேந்தன்). யாழ்ப்பாணம்: க.ஆறுமுகம், முருகன் அருட்பிரவாகம், 171ஃ10, நல்லூர் வடக்கு வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஜுலை 1994. (கொழும்பு 11: ல க்ஷ்மீஹர, 309, செட்டியார் தெரு). vii, 32

14407 அரசகரும மொழித் தேர்ச்சி மேலதிக வாசிப்பு நூல்: எழுத்துச் சிங்களம்.

அரசகரும மொழிகள் திணைக்களம். கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 8: