14917 ஒரு மாமன்னரின் பொற்காலம்.

அனிஸ்டஸ் ஜெயராஜா. கொழும்பு 6: பூங்காற்று பதிப்பகம், 59, 1/1, ஹைலெவல் வீதி, கிருலப்பனை, 1வது பதிப்பு, ஜுன் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை). xvi, 82 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-0700- 06-6. மர்ஹூம் எம்,எச்.எம்.அஷ்ரப் அவர்கள் 1948 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி சம்மாந்துறையில் முஹம்மது மீரா லெப்பை ஹூஸைன் மற்றும் மதீனா உம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனாக கல்முனையில் பிரபலமான காரியப்பர் குடும்பத்தில் பிறந்தார். சட்டக் கல்லூரியில் கல்வி கற்கும் காலத்திலேயே அஷ்ரப் இலங்கை அரசியலில் தீவிர ஆர்வம் கொண்டார். அஷ்ரப் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தார். தந்தை செல்வநாயகத்தை தனது அரசியல் குருவாக அஷ்ரப் வகுத்துக் கொண்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் நடவடிக்கைகளில் தீவிர பங்கு கொண்ட எம். எச்.எம். அஷ்ரப் 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். மர்ஹம் எம்.எச்.எம். அஷ்ரபைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்களை ஓரணியில் இணைப்பதற்கு பெரு முயற்சி எடுத்தது. முஸ்லிம்களின் தனித்துவமான குரலாக அது ஒலிக்கத் தொடங்கியது. 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதன் முதலாக போட்டியிட்டது. அனிஸ்டஸ் ஜெயராஜாவின் இந்நூல் மர்ஹம் எம்,எச்.எம்.அஷ்ரப் அவர்களின் வாழ்வின் சில பக்கங்களை பதிவுசெய்கின்றது. இவர் முன்னதாக “கிழக்கின் உதயம் தேசத்தின் இதயம் (இரண்டு பாகங்கள்)”, “அஷ்ரபின் அந்த எழு நாட்கள்” ஆகிய நூல்களையும் இவரைப்பற்றி எழுதியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53731).

ஏனைய பதிவுகள்

12507 – சமகால உளவியல்.

இந்திரா செல்வநாயகம். வவுனியா: தமிழ் மன்றம், வ/தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, மே 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம்). xv, 141 பக்கம், விலை: ரூபா 350.00, அளவு: 21×15 சமீ.,