கனகசபை தேவகடாட்சம். (தொகுப்பாசிரியர்). திருக்கோணமலை: முற்போக்கு வாலிபர் மன்றம், கிண்ணியா, 2வது பதிப்பு, டிசெம்பர் 2002, 1வது பதிப்பு, நவம்பர் 2002. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், 361, நீதிமன்ற வீதி). 58 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14 சமீ. மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீது (15.11.1933-13.11.1987)அவர்களின் நினைவு மலர். வாசலிலே சில நிமிடங்கள், தொகுத்துச் சூடுகிறேன் (கனகசபை தேவகடாட்சம்), வாழ்த்துச் செய்தி எம் இதயத்தில் என்றும் (மூதூர் ஜெஸ்மின் மகறூப்), இந்நாட்டின் விடுதலைக்கு முஸ்லிம்களும் போராடினர், முஸ்லிம்களின் தாய் மொழியும் போதனா மொழியும் தமிழே, முஸ்லிம்கள் இந்நாட்டில் சிறுபான்மையினர் ஆனால் உலகில் பெரும்பான்னையினர், இந்நாட்டின் முஸ்லிம்கள் இரண்டாம்தரப் பிரஜைகளல்ல, நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும், மூதூர்த் தொகுதியின் முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், அடித்தோய்ந்த அரசியற் தென்றல், அவரது இலக்கிய முகம் (எம்.எஸ்.அமானுல்லா), கிண்ணியாவின் கல்வி பற்றிய ஒரு பதிவு, மூதூர் முதல்வன் “மஜீது”, நினைவுக் கவிதை, மர்ஹ_ம் அப்துல் மஜீதுஒரு நவீன அரசியல் கலாசாரத்தின் பிதாமகன், நான் கண்ட அப்துல் மஜீத் நடுங்காத ஒரு வீரன், சரித்திரமாகிய ஒரு சரித்திரம் (ஏ.நஜிமுதீன்), இனி ஒருவன் வருவனோ (எஸ்.ஏ.முத்தலிப்), நிரந்தரமாய் நீ வாழ்வாய் (மூதூர் முகையதீன்) ஆகிய அஞ்சலிப் படையல்களுடன் இம்மலர் வெளிவந்துள்ளது. அமரர் ஏ.எல். அப்துல் மஜீத் (நவம்பர் 15, 1933 – நவம்பர் 13, 1987) கிழக்கிலங்கையின் அரசியல்வாதியும், முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். மார்ச் 1960 இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியில் தையல் இயந்திரச் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வி கண்டார். அதே ஆண்டு சூலை மாதம் நடந்த பொதுத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். அன்றிலிருந்து 1977 வரை மூதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இக்காலத்தில் அவர் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைப் பிரதி அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார். அப்துல் மஜீத் 1987ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி இனந்தெரியாதோரால் மூதூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27462).