14920 பாரதரத்னா இந்திரா.

கண.சுபாஷ் சந்திரபோஸ். கொழும்பு 11: மெய்கண்டான் வெளியீடு, 161, செட்டியார் தெரு, 2வது பதிப்பு, டிசம்பர் 1985, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1985. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு). (12), 42+8 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 15.00, அளவு: 21×14 சமீ. பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களின் மறைவின் முதலாம் ஆண்டு நிறைவின்போது இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அன்னை இந்திராவின் வாழ்க்கை வரலாற்றுடன் அவரது வெளியுறவுக் கொள்கைகள் பற்றியும் இந் நூல் பேசுகின்றது. “ஆக்கபூர்மான நடுநிலைமையே” பாரதத்தின் அயலுறவுக் கொள்கை என்று உலக அரங்கில் வலியுறுத்தி வந்தவர் அவர். அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தித் துறைகளில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசென்ற பெருமை அவருக்குண்டு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24445).

ஏனைய பதிவுகள்

16814 ஞாபகம் உதிராப் பூவென: மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்.

கெகிறாவ ஸீலைஹா. கெகிறாவ: கெகிறாவ ஸீலைஹா, செக்குப்பிட்டிய, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ், 41, Brass Founder Street). 144 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14 சமீ.,