ஏ.எம்.எம்.அலி (தொகுப்பாசிரியர்). கிண்ணியா 4: ஷரீபா வெளியீட்டகம், 118, நகரசபை வீதி, 1வது பதிப்பு, 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 86 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 950., அளவு: 29.5×21 சமீ., ISBN: 978- 955-38105-0-2. ஆசிரியரின் வாழ்க்கை வரலாறு இந்நூலில் அவரது வரலாற்றுக் குறிப்புகள், புகைப்படங்களின் உதவியுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுகம்: ஏ.சீ.எம். இப்றாஹீம், பாடசாலைக் காலம், வேலை தேடிய நாடோடியாக, அரச சேவையும் அரசியலும், கணக்காய்வுத் திணைக்களத்தில் சாதனையும் வேதனையும், வெளிநாட்டு அமைச்சில் ஆரம்ப காலம், சீனாவில் சிலகாலம் 1988-1991, தாய்லாந்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில், சவூதி அரேபியாவில், சிங்கப்பூர் சீமையில் சிலகாலம், இளைப்பாறிய பின்னர் இன்று எனப் பல்வேறு தலைப்புகளினூடாக இவரது வாழ்க்கைப் பயணம் புகைப்பட ஆதாரங்களுடனும் பத்திரிகைச் செய்திக் குறிப்புகளின் நிரூபணங்களுடனும் தொகுக்கப்பட்டுள்ளது. ஏ.சீ.எம். இப்றாஹீம் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர சேவையில் இணைந்து, சீனக்குடியரசின் தலைநகரிலும், தாய்லாந்து, சவூதி அரேபியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் சேவையாற்றி இளைப்பாறியவர்.
Bet with 20BET APK: Your Gateway to Exciting Wagers
Bet with 20BET APK: Your Gateway to Exciting Wagers