14924 இன்றைய உலகில் உஸாமா பின்லேடன்.

எம்.எஸ்.முபாரக். இலங்கை: தளம் வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை). 32 பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 21×14 சமீ. இஸ்லாமிய போராளியும் உலக இஸ்லாமிய இளைஞர்களால் தலைவனாகப் போற்றப்படுபவருமான உஸாமா பின் லேடனின் வாழ்க்கைக் குறிப்பு மற்றும் அமெரிக்கா மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள், அமெரிக்காவின் கோழைத்தனமான பதில் நடவடிக்கைகள் பற்றி இச்சிறுநூலின் மூலம் விளக்கமளிக்க ஆசிரியர் முயன்றுள்ளார். இந்நூலில் தீவிரவாதம் பற்றி, உஸாமா பின் லேடன் வாழ்க்கைச் சுருக்கம், சீ.ஐ.ஏ உடனான உஸாமாவின் தொடர்பு, அமெரிக்கா மீதான தாக்குதல்களும், உஸாமா மீதான குற்றச்சாட்டுகளும், அமெரிக்கா ஏன் தாக்கப் படவேண்டும் அமெரிக்கா மீதான தாக்குதல்-ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம் ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33625).

ஏனைய பதிவுகள்

13A13 – சைவப் பிரகாசிகை: ஐந்தாம் புத்தகம்.

ச.குமாரசுவாமிக் குருக்கள். யாழ்ப்பாணம்: ச.கு.வைத்தியேசுவரக் குருக்கள், அச்சுவேலி, 9வது பதிப்பு, ஆனி 1954, 7வது பதிப்பு, நந்தன வருடம் தை 1953, 1வது பதிப்பு, மார்ச் 1933. (பருத்தித்துறை: சிவஸ்ரீ வைத்தீசுவரக் குருக்கள், கலாநிதியந்திரசாலை).