த.நீதிராஜா குடும்பத்தினர். கொழும்பு 13: த.நீதிராஜா, 89 புதுச்செட்டித் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1997. (கொழும்பு 12: நியு லீலா அச்சகம், 182, மெசெஞ்சர் வீதி). 60 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ. யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் மேற்கைப் புகுந்தவிடமாகவும் கொழும்பு புதுச்செட்டித் தெருவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நீதிராஜா திலகவதி அம்மையாரின் நினைவாக 24.10.1997 அன்று வெளியிடப்பெற்ற நினைவுமலர். இவர் முன்னாள் செனேட்டர், மாநகர சபை உறுப்பினர், பிரபல தொழிலதிபர் நீதிராஜா அவர்களின் துணைவியாவார். இம்மலரில் நீதியின் திலகம், என் நெற்றித் திலகம் அழிக்கப்பட்டது (த.நீதிராஜா), தீர்ப்பு இறைவன் சிந்தனைக் குரியது (மகள் திருமதி பத்மினிதேவி வடிவேற்கரசன், மருகர் வீ.ஆர்.வடிவேற்கரசன்), பாச நினைவுகள் மோதுகின்றன (மருமகள் திருமதி அமிர்தாம்பிகை அருளானந்தன், மருகர் எஸ்.ரீ.எஸ்.அருளானந்தன்), கண்ணீர் சொரிந்து கொண்டே இருக்கிறேன் (மகன் நீ.தனராஜா மருமகள் ஜெயந்தி), அம்மம்மா போனதெங்கே (பேரன் திபா, பேத்திகள் ஹரி, தயா), இறை சோதியுட் கலந்தீரோ அம்மம்மா (பேரன் அர்ச்சுணா அனுஷன், பேத்தி அஞ்சணா), ஆத்ம ஜோதி ஆனீர்களோ சிறார்கள் நாம் சிலையானோம் (பேரன் மயூரன், பிரதீபன், பார்த்திபன் பேத்தி ஆதித்யா), பிஞ்சு வயதில் கொஞ்சி விளையாடிய அம்மம்மா (பேத்தி தயாஹரி வடிவேற்கரசன் பேரன் அனுஷன் அருளானந்தன்), காலன் கவர்ந்து விட்டான் (பேரன் மயூரன்), துணையாய் என்றும் வந்திடம்மா ஆகிய குடும்பத்தார் நினைவஞ்சலியுடன், திருவலிவலம், திருநீற்றுப்பதிகம், திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்த தேவாரம், திருஞானசம்பந்த நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், திருக்கேதீச்சர பதிகம், திருவாசகம், மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த திருவாசகம், சிவபுராணம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம், திருப்புகழ், சகலகலாவல்லிமாலை ஆகியவையும் தொகுக்கப்பெற்றுள்ளன. இறுதிப் பிரிவில் நீதிராஜா திலகவதி அம்மாள் சிவலோகப்பிராப்தி நினைவாஞ்சலி, ஆன்ம சாந்தி உரை, நெஞ்சத்தால் நிறைந்த திலகவதியாரை மஞ்சத்தில் வைத்த மஞ்சவனப்பதி முருகன், ஓம் சக்தியே, கிறீன்லன்ஸ் பணி அன்பர்கள் அனுதாபம், நாமாவளிகள், தேவராய சுவாமிகள் கந்தர் சஷ்டி கவசம், தேவி கருமாரியம்மன் ஸ்தோத்திரம், சிவ நாமம், வைரவர், பழனி முருகன், கணபதி, கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி, நாவெழாது நன்றி சொல்வோம் ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34848).