14938 பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும் மொழியியலும்.

ஈழக் கவி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 52 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-4676-82-4. ஈழத்தமிழ் புலமையாளர் வரிசையில் பன்முக ஆளுமை கொண்ட பேரொளியாக பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் பிரகாசிக்கிறார். நுஃமான் பிறந்தது 10 ஆகஸ்ட் 1944 அன்றாகும். கிழக்கிலங்கையின் கல்முனைக்குடி இவர் பிறந்த இடம். இலக்கிய விமரிசகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எனப் பல்துறை ஆளுமை மிக்கவர். திறனாய்வு, மொழியியற் சிந்தனை, கவிதை, மொழிபெயர்ப்பு, கல்வித்துறை சார்ந்த கருத்தியல் உருவாக்கம் போன்ற பலதிறப்பட்ட பங்களிப்பைத் தமிழுக்கு இவர் வழங்கியுள்ளார். நுஃமான் தனது ஆரம்பக் கல்வியைக் கல்முனைகுடி அரசினர் ஆண்கள் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியைக் கல்முனை வெஸ்லி உயர்நிலைப் பாடசாலையிலும் கற்றார். இலக்கியமும் ஓவியம் வரைதலும் அவரது இளமைக்கால ஈடுபாடுகளாக இருந்தன. பேராசிரியர் நுஃமான் முப்பதுக்கும் அதிகமான நூல்களுக்கு ஆசிரியர். மொழியும் இலக்கியமும் (2006), மொழியியலும் இலக்கியத் திறனாய்வும் (2001), மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் (1987), திறனாய்வுக் கட்டுரைகள் (1986), பாரதியின் மொழிச் சிந்தனைகள் (1999), இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம், (1979), அடிப்படைத் தமிழ் இலக்கணம் (2007) ஆகியவை பேராசிரியர் நுஃமானின் முக்கியமான விமரிசன நூல்கள். மழைநாட்கள் வரும் (1983), அழியா நிழல்கள் (1982), தாத்தாமாரும் பேரர்களும் நெடுங் கவிதைகள் (1977), பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (1984) ஆகிய கவிதை நூல்கள் மிகப் பரவலாக அறியப்பட்டவை. பல்கலைக்கழக தமிழ் ஆளுமைகள் தொடரில் ஆறாவது நூலாக வெளிவந்துள்ள இப்பிரசுரம், ஜீவநதி வெளியீட்டகத்தின் 109ஆவது பிரசுரமுமாகும்.

ஏனைய பதிவுகள்

14876 சின்னச் சின்ன எண்ணங்கள்.

அனிஸ்டஸ் ஜெயராஜா. கொழும்பு 6: பூங்காற்று பதிப்பகம், 59, 1/1, ஹைலெவல் வீதி, கிருலப்பனை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை). xii, 38 பக்கம், விலை: ரூபா 100., அளவு: