மலைஅரசி சிவராஜா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமதி மலைஅரசி சிவராஜா, 47/3, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி வடக்கு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). vi, 108 பக்கம், புகைப்படங்கள், வண்ணத் தகடுகள், விலை: அன்பளிப்பு, அளவு: 21.5×14.5 சமீ. வைத்திய கலாநிதி அமரர் நடராஜா சிவராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் சமூக மருத்துவத்துறையில் 1981-2003 காலகட்டத்தில் 22 ஆண்டுகள் விரிவுரையாளராகவும், முதுநிலை விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். இதில் 18 ஆண்டுகள் துறைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2003இலிருந்து 2013வரையிலான போர்க்காலச் சூழலில் ஐக்கிய நாடுகள் உலக சுகாதார மையத்தின் வட மாகாணத்துக்கான களப்பணி ஆலோசகராகவும் இணைப்பாளராகவும் பணியாற்றியவர். அவரது மறைவின் முதலாம் ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வின் போது இந்நூல் வெளியிடப்பட்டது. இம்மலரில் கடந்த ஆண்டு மறைந்த அமரர் நடராஜா சிவராஜா அவர்களின் அஞ்சலி நிகழ்வின்போது, 10.03.2019 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஹோவர் விரிவுரை மண்டபத்தில் (Hover Auditorium) பல்வேறு பிரமுகர்களால் ஆற்றப்பட்ட அஞ்சலி உரைகளின் உரைவடிவம் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. அமரர் சிவராஜாவின் மறைவையொட்டி உலக சுகாதார ஸ்தாபனத்தின் அலுவலர்களால் உருவாக்கப்பட்ட In Loving Memory of Dr. Sivarajah என்ற அஞ்சலி உரைக் குறிப்பேட்டின் பக்கங்களும், Memorable moments with Dr. Sivarajah என்ற தலைப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய Dr.Kolitha Wickramage அவர்களின் அமரர் சிவராஜா தொடர்பான புகைப்பட நினைவாவணமும் பின்னிணைப்புகளாக இடம்பெற்றுள்ளன.