செல்லையா மெற்றாஸ்மயில் (மலர் ஆசிரியர்). யாழ்ப்பாணம்: பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம், 12/1, மூத்த விநாயகர் வீதி, கச்சேரிநல் லூர் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1998. (யாழ்ப்பாணம்: கத்தோலிக்க அச்சகம், நல்லூர்: மீனாட்சி அச்சகம், 315 கச்சேரி-நல்லூர் வீதி). 152 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ. யாழ்ப்பாணம்- பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம், 26.12.1998, 27.12.1998 ஆகிய தினங்களில் யாழ். இந்து மகளிர் கல்லூரியில் கலைஞர் கௌரவிப்பையும், பரிசளிப்பு விழாவையும் விழாவாகக் கொண்டாடியிருந்தனர். அன்றைய தின நினைவாக வெளிவந்துள்ள சிறப்பிதழ் இதுவாகும். கழகக் கீதம், ஆசிச்செய்திகள், வாழ்த்துச் செய்திகளுடன் அன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவும் கலைஞர் கௌரவிப்பு விழாவும் பற்றிய செய்திகளுடன், பரிசளிப்பு நிகழ்வுகள், கலைஞர்களுக்கு மகுடம் அன்பளிப்புச்செய்து கௌரவிப்பவர்கள், இசைநாடக, நாட்டுக்கூத்துப் போட்டியில் பங்குபற்றிய 500க்கு மேற்பட்ட கலைஞர்களில் சிறந்த நடிகர்களாக தெரிவு செய்யப்பட்டு பாராட்டுப்பத்திரம் பெறுபவர்கள் பற்றிய விபரங்களும், வரலாறாகும் கலைஞர்கள் பற்றிய குறிப்பும் இடம் பெற்றுள்ளன. இவ்விழாவில் கௌரவம் பெறும் இசை நாடகக் கலைஞர்களான நீ. வின்சென் டி போல், கலாபூசணம் அ. முருகவேள், நா. சின்னத்துரை, வி.ரி. செல்வராசா, சின்னத்தம்பி கனகன், கார்த்திகேசு மதியாபரணம், ரி.எம். அந்தோனிப்பிள்ளை, வஸ்தியாம்பிள்ளை ஜேக்கப், அ. பாலதாஸ், ஆசீர்வாதம் மரியதாஸ், வடிவேலு செல்வரத்தினம், ம.பொ.தைரியநாதன், செ.இரத்தினகுமார், சிதம்பரம் செல்வராசா, கதிர்காமு இரத்தினம், வி.என்.செல்வராசா, இராமன் மார்க்கண்டு, சி. தார்சீசியஸ், ஆ.சோதிலிங்கம், அ. ஞானகாந்தன், காத்தவராயன் கூத்துக் கலைஞர் சடையன் சிவஞானம், வே. நந்தகோபாலன், சீரணியூர் செல்வராஜா ஆகியோர் பற்றிய விரிவான வாழ்வும் பணிகளும் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36526).